நயன்தாரா To அட்லீ: அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட தமிழ் பிரபலங்கள் யார் யார்?  Twitter
சினிமா

நயன்தாரா To அட்லீ: அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட தமிழ் பிரபலங்கள் யார் யார்?

தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோரின் ஆன்ட்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் பல பிரபலங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Priyadharshini R

வட நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் பண்டிகை களைக்கட்டியது.

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்திய திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஹைத்ராபாத், மும்பை போன்ற இடங்களில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 19 ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோரின் ஆன்ட்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில் பல பிரபலங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஷாரூக்கான் - கௌரி கான், ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே, அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி, ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா, விக்கி கௌஷல், அஜய் தேவ்கன், ரோகித் ஷெட்டி, ஷ்ரத்தா கபூர், மௌனி ராய், திஷா பதானி, அனில் கபூர், ஹேமா மாலினி, அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனா, ரேகா, ஜெனிலியா உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல், தமிழ் சினிமா பிரபலங்களான இயக்குநர் அட்லி - நடிகை ப்ரியா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா உள்ளிட்டவர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர்.

அனைவரும் பாரம்பரியத் உடையில் வந்திருந்தனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?