நீயா நானா: செட் பிராபர்ட்டியை எடுத்து இளைஞரை அடிக்க சென்ற கோபிநாத் - என்ன நடந்தது? twitter
சினிமா

நீயா நானா: செட் பிராபர்ட்டியை எடுத்து இளைஞரை அடிக்க சென்ற கோபிநாத் - என்ன நடந்தது?

Keerthanaa R

பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான நீயா நானாவில், தொகுப்பாளர் கோபிநாத் இளைஞரை அடிக்கச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. கிட்ட தட்ட இரண்டு தசாப்தங்களாக நடந்துவருகிறது இந்த நிகழ்ச்சி.

கார சாரமான, சென்சிட்டிவான, நகைச்சுவையான, மனதை இருக்கமாக்கும் பல தலைப்புகளில் விவாதங்களை முன்வைத்திருக்கிறது. பல சமூக பிரச்சினைகளை, தற்கால நிகழ்வுகளை மாற்றங்கள் குறித்தும் எடுத்து பேசியிருக்கின்றனர்.

விஜய் டிவி மட்டுமல்லாமல், ரியாலிட்டி ஷோக்களில் முன்னணியில் இருந்து வருகிறது நீயா நானா. இந்த நிகழ்ச்சியை தொடங்கியது முதலே தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத்.

இந்நிலையில், இன்று ஒளிப்பரப்பாகியுள்ள எபிசோடில், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பல முறை, பல எபிசோட்களில் பேசுபவர்கள் நியாமற்றதாகவோ, ஒப்புக்கொள்ளும்படி பேசாமல் இருந்தபோதிலும், அதனை தனது பேச்சுத் திறனால், அறிவாற்றலால் கையாண்ட கோபிநாத், இன்றைய எபிசோடில் கொஞ்சம் நிதானம் தவறிவிட்டார்

இன்றைய விவாதம், "அதிக அக்கறை காட்டும் ஆண் நண்பர்கள் vs அந்த அக்கறை எரிச்சலாக இருக்கிறது என்று கூறும் பெண் தோழிகள்" என்ற தலைப்பில் நடந்தது.

தனது பெண் தோழி (காதலி அல்ல) மீது எவ்வளவு அக்கறை உள்ளது, எதையெல்லாம் நான் அவளுக்காக செய்வேன், அவளை தனியாக விடமாட்டேன் என்பது போன்ற கருத்துகளை முன்வைத்துக்கொண்டிருந்தனர்.

இவர்களின் இந்த அக்கறை, எங்கள் மீது திணிக்கப்படும் இன்னொரு வகைக் கட்டுப்பாடு தான் என்பதை பெண்கள் தரப்பு எதிர்விவாதம் செய்துகொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில், இளைஞர் ஒருவரிடம், கோபிநாத்,

"நீங்கள் தோழி என்று கூறி அக்கறை காட்டும் இந்த பெண் நாளை திருமணமாகி விட்டுச் சென்றால் என்ன செய்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்த இளைஞர், "வேறு யாராவது கிடைப்பார்கள்" என்று கூறினார்.

இதனைக் கேட்ட கோபிநாத் நீயா நானா செட்டில் அலங்காரத்திற்கு வைத்திருந்த பொருளை எடுத்து அவரை அடிக்கச் சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் சற்றே பரபரப்பை கிளப்பியுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?