சோழர்கள் News Sense
சினிமா

பொன்னியின் செல்வன் கற்பனை தானா? சோழர்கள் பற்றிய உண்மையை எப்படி தெரிந்துகொள்ளலாம்?

Antony Ajay R

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகிறது. தமிழ் மன்னர்கள் பற்றி நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த படம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

என்ன தான் தமிழ் ரசிகர்கள் தங்கள் பண்பாட்டைம, கலாச்சாரத்தைக் கொண்டாடினாலும் உண்மையில் பொன்னியின் செல்வன் சோழர்களின் வாழ்வைப் பிரதிபலித்ததா என்பது கேள்விக்குறி தான்.

பொன்னியின் செல்வன் நாவல் உண்மையில் நடந்த நிகழ்வுகள் இல்லை. அது ஒரு கற்பனைக் கதை. வந்தியத்தேவன் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்கள் கல்கியின் கற்பனையால் உருவாக்கப்பட்டவை.

இதனால் பொன்னியின் செல்வன் நாவலையோ அல்லது படத்தையோ நாம் ஒரு வரலாற்று ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனினும் இளைஞர்கள் வரலற்றை அறிந்துகொள்ள முயல்வது வரவேற்கத்தக்கது.

சரி, சோழர்களின் உண்மையான வரலாற்றை எப்படி அறிந்துகொள்ளலாம்?

சோழர் பற்றிய நூல்கள்

1. சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி

2. சோழர் வரலாறு - மா. இராச மாணிக்கனார்

3. பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவப் பண்டாரத்தார்

4. சோழர் சரித்திரம் - ந. மு. வேங்கடசாமி நாட்டார்

5. தமிழ் நாட்டு வரலாறு - சோழப் பெரு வேந்தர் காலம் - தமிழ் வளர்ச்சித் துறை

6. பழங்காலச் சோழர்களின் வரலாறு - அ. சவரிமுத்து

செப்பேடுகள்:

1. சோழர் செப்பேடுகள் - நடன. காசிநாதன்

2. சோழர் செப்பேடுகள் - வே. மகாதேவன், சங்கர நாராயணன்

3. சோழர் காலச் செப்பேடுகள் - மு. இராஜேந்திரன்

4. திருவிந்தளூர் செப்பேடு - தமிழ்நாடு தொல்லியல் துறை

5. இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டு செப்பேடுகள் - ச. கிருஷ்ணமூர்த்தி

6. புதுச்சேரி மாநில செப்பேடுகள்- ந. வெங்கடேசன்

கல்வெட்டுக்கள்:

1. தமிழகக் கலைகளும் கல்வெட்டுக்களும் - மா. இராசமாணிக்கனார்1124

2. சிவபாதசேகரனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள் - வே. மகாதேவன்

3. கல்வெட்டுச் சொல் அகராதி - தி. நா. சுப்ரமணியம்

4. கல்வெட்டுகள் கூறும் உண்மைகள் - சதாசிவப் பண்டாரத்தார்

5. இந்தியக் கல்வெட்டுக்களும் எழுத்துக்களும் - C. சிவராமாமூர்த்தி

6. திருவலஞ்சுழி கல்வெட்டுக்கள் - ஆ. பத்மாவதி

7. அழகர் கோயில் கல்வெட்டுக்கள் - தி. ஸ்ரீ. ஸ்ரீதர்

8. சென்னை மாநகர்க் கல்வெட்டுக்கள் - இரா. நாகசாமி

9. காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள் - தி. ஸ்ரீ. ஸ்ரீதர்

10. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள் - தி. ஸ்ரீ. ஸ்ரீதர்

11. விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுக்கள் - தி. ஸ்ரீ. ஸ்ரீதர்

12. திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுக்கள் - சி. பி. சிங்

13. கல்வெட்டுக் காலாண்டிதழ் - தமிழ்நாடு தொல்லியல் துறை (3 மாதங்களுக்கொரு முறை)

சோழ மன்னர்கள்:

1. பட்டினப் பாலை-ஆராய்ச்சி உரை - மறைமலை அடிகள்

2. பட்டினப் பாலை ஆராய்ச்சி உரை - சுவாமி சிதம்பரனார்

3. கரிகால் சோழன் - ச. நிரஞ்சனா தேவி

4. இலங்கை வேந்தன் எள்ளாலன் - செங்கை ஆழியான்

5. கார் நாற்பது கள வழி நாற்பது - ந.மு. வேங்கடசாமி நாட்டார்

6. கள வழி நாற்பது - பி. ஸ்ரீ

7. ராஜராஜ சோழன் - ச. ந. கண்ணன்

8. இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் - சி. இளங்கோ

9. இராசராசன் - சா. கணேசன்

10. இராசராசன் துணுக்குகள் நூறு - சீ. வசந்தி

11. முதலாம் இராசராச சோழன் - கே.டி.திருநாவுக்கரசு

12. முதலாம் இராசேந்திர சோழன் - ம. இராச சேகர தங்கமணி

13. இராசேந்திரன் செய்திக் கோவை - த. நா. அரசு தொல்லியல் துறை

14. தமிழ்ப்பேரரசன் ராஜேந்திரன் - வெ. நீலகண்டன்

15. இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001-முதல் பாகம் - அறம் கிருஷ்ணன்

16. வீர சோழியம் - கா. ர. கோவிந்தராஜ முதலியார்

17. முதற்குலோத்துங்க சோழன் - சதாசிவப் பண்டாரத்தார்

18. கலிங்கத்துப் பரணி - பி. ரா. நடராசன்

19. கலிங்கத்துப் பரணி - புலியூர்க் கேசிகன்

20. விக்கிரம சோழனுலா - கமலா முருகன்

21. விக்கிரம சோழனுலா - கதிர் முருகு

22. குலோத்துங்க சோழனுலா - கதிர் முருகு

23. இராசராச சோழனுலா - கதிர் முருகு

பொன்னியின் செல்வன்

புதினங்கள்:

1. பொன்னியின் செல்வன் - கல்கி

2. வேங்கையின் மைந்தன் - அகிலன்

3. உடையார் - பாலகுமாரன்

4. கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

5. சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?