Priyanka Chopra, John Cena இணையும் புதிய படம்: கொண்டாட்டத்தி ரசிகர்கள்- எப்போது தயாராகும்? Twitter
சினிமா

Priyanka Chopra, John Cena இணையும் புதிய படம்: உற்சாகத்தில் ரசிகர்கள் - எப்போது தயாராகும்?

Antony Ajay R

90'ஸ் கிட்ஸ்களின் ஆதர்ச ஆக்‌ஷன் நாயகன் ஜான் சீனாவுடன் தனது அடுத்த படத்தில் இணையப்போவதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த டெட்லைன் என்ற பத்திரிகையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துகொண்டார்.

விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

பாலிவுட் சினிமாவில் இருந்த அரசியலால் அங்கிருந்து விலகியதாக சமீபத்திய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கில பாடல்கள், மியூசிக் வீடியோக்கள் மூலம் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்த பிரியங்கா சோப்ரா படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் வழியாக அங்கும் புகழ்பெற்றவராக உயர்ந்தார்.

பிரியங்கா ஜான் சீனாவுடன் இணையும் செய்தி அவருடைய ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜான் சீனா ஒரு ராப் பாடகராக தொடங்கி WWE மல்யுத்தத்தில் பிரபலமடைந்தார்.

WWE உலகில் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் என்ற புகழ் அவருக்கு உண்டு. அதிக சாம்பியன்ஷிப்களை வென்று ஹீரோவாக திகழ்ந்தார்.

ஜான் சீனா WWE மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான ஹீரோவாக திகழ்ந்தார். பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

பிரியங்கா, ஜான் சீனாவுடன் இட்ரிஸ் இல்பாவும் இந்த படத்தில் நடிக்கிறார். இல்யா நைஷுல்லர் இயக்க, அமேசான் ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு Heads Of State எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த படம் வரும் மே மாதம் தொடங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இப்போது பிரியங்கா சோப்ரா அவருடைய சிட்டாடெல் வெப்சீரிஸ் புரோமோஷனில் பிசியாக இருக்கிறார். இந்த சீரிஸ் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?