Pa.Ranjith and Rajinikanth Twitter
சினிமா

"நட்சத்திரம் நகர்கிறது தான் பெஸ்ட் படம்" - பா.ரஞ்சித்தை பாராட்டிய ரஜினிகாந்த்

Antony Ajay R

பா.ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது வழக்கமான பானியிலிருந்து விலகி வேறுபட்ட திரை மொழியில் இந்த படத்தினை உருவாக்கியிருக்கிறார்.

காதலின் பல பரிமாணங்களை, நாடகக்காதல் என்ற போலி பிரச்சாரத்தை, ஓரினச் சேர்கையாளர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் காதலை பேசும் இந்த திரைப்படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தென்மா இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் நடிகர் நடிகைகள் பாராட்டுக்களைப் பெற்றிருந்தனர். நடிகை துஷாராவுக்கு இது மிக முக்கியமான படமாக அமைந்திருந்தது. கலை இயக்குநர் ஜெயா ரகு மற்றும் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் வெகுவாக பாரட்டப்பட்டனர்.

இந்த படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித்தை பாராட்டிய ரஜினிகாந்த், "எழுத்து, இயக்கம், நடிகர்கள் தேர்வு, நடிகர்களின் நடிப்பு, கலை, ஒளிப்பதிவு, இசை என அனைத்திலும் உங்களின் பெஸ்டான படைப்பு இது" என்று ரஞ்சித்திடம் தெரிவித்ததாக தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார் இயக்குநர் ரஞ்சித்.

முன்னதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்த படம் குறித்து வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?