பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அம்ரித் ரத்னா சம்மான் விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு விருது வழங்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும் இந்த அம்ரித் ரத்னா சம்மான் விருதுகள், இந்தியாவிலுள்ள பிரபலங்கள், அவர்களது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும். இந்த ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தேசத்திற்காக மகத்தான பங்காற்றியவர்களைக் கௌரவிக்கவுள்ளனர்.
இந்த விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரபலங்களின் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இயக்குநர் பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரஜினிகாந்த், தனது கரியரின் துவக்கத்தில் வில்லன் ரோல்களில் நடித்து வந்தார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளிள் மட்டுமே தோன்றினாலும் தனது மாறுபட்ட நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்திருந்தார் ரஜினி.
மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே போன்ற திரைப்படங்களில் இரக்கமற்ற வில்லனாக ரஜினிகாந்த் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவற்றுக்கு மத்தியில் புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் இவருக்கு கிடைத்த பாசிடிவ் ரோல் தான், ரஜினிகாந்த் எந்த கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதில் சிறந்து விளங்க முடியும் என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்தது.
சங்கர் சலீம் சைமன், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற டபுள், ட்ரிபில் ஹீரோ சப்ஜெக்டளில் நடித்து வந்த ரஜினி காந்த்திற்கு சோலோ ஹீரோவாக முதன் முதலில் வெளியான படம் பைரவி. இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு சூப்பர்ஸ்டார் என்ற பட்டமும் வந்தது.
அதன் பின் வெற்றிகளை நோக்கி ஓடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பிருந்தது. இவர் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்தும் பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஃபிலிம்ஃபேர், தமிழ்நாடு மாநில விருதுகள், கலைமாமணி, எம் ஜி ஆர் விருது , இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்ம விபூஷன்,செவாலியே சிவாஜி கணேசன் விருதுகளைப் பெற்றுள்ள சூப்பர் ஸ்டாருக்கு, தற்போது அம்ரித் ரத்னா விருது கிடைத்துள்ளது.
இந்த விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது
இந்த அம்ரித் ரத்னா சம்மானுடைய முதல் எடிஷனில் நடிகர் ரஜினிகாந்த் உள்பட, பி டி உஷா, அடர் பூனாவாலா, என் ஆர் நாராயண மூர்த்தி, மற்றும் பலருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust