கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலிலும் திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்ற மதத்தினரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த கோவிலின் நடை திறக்கப்பட்டதைடுத்து கேரளா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்றனர்.
முன்னணி நடிகையான அமலா பாலும் உறவினர்களுடன் இக்கோவிலுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரை கோவிலுக்குள் நுழைய கோவில் நிர்வாகிகள் மறுத்ததாக கூறப்படுகிறது.
அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்திருக்கிறார். பின்னர் அவர் கோவில் வருகை பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவேற்றியுள்ளார்.
அதில் திருவைராணி குளம் மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
இந்த 2023-ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தம் அளிக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் நிர்வாகிகள் கூறும்போது, இக்கோவிலில் இதுவரை கடைபிடித்து வந்த நடைமுறைப்படியே நடிகை அமலா பால் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
அமலா பாலை எல்லோருக்கும் தெரியும் என்பதால் தான் இந்த விவகாரம் இவ்வளவு பெரிய சர்ச்சையாகியுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust