சதீஷின் சொன்ன விளக்கம்; நடிகை பதிலடி twitter
சினிமா

Oh My Ghost: தர்ஷா சன்னி லியோன் ஆடை விவகாரம் - சதீஷின் சொன்ன விளக்கம்; நடிகை பதிலடி

இவரது கருத்துக்கு அங்கு வந்திருந்த ரசிகர்களும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். இந்த கருத்து இணையத்திலும், பிரபலங்கள் மத்தியிலும் சர்ச்சையானது. நடிகர் சதீஷுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வந்தனர்.

Keerthanaa R

நடிகர் சதீஷ் நடிகை தர்ஷா குப்தாவின் ஆடை குறித்த சர்ச்சையான கருத்திற்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஓ மை கோஸ்ட் படத்தின் டிரெய்லர் லான்ச் நடைபெற்றது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், யோகி பாபு மற்றும் நடிகை தர்ஷா குப்தா ஆகியோரும் நடித்துள்ளனர்

இந்நிலையில் டிரெய்லர் லான்ச் நிகழ்ச்சியின் போது மேடையில் நடிகர் சதீஷ் நடிகை தர்ஷா குப்தா மற்றும் சன்னி லியோனின் ஆடைகள் குறித்து பேசியிருந்தார். நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு புடவையில் வந்திருந்தார்.

தர்ஷா குப்தா மாடர்ன் ஆக உடை அணிந்திருந்தார். அதற்கு சதீஷ் மேடையில், "சன்னி லியோன் பாம்பேவிலிருந்து தமிழகத்திற்கு வந்திருக்கிறார். அவர் எப்படி டிரஸ் செய்திருக்கிறார் என்று நாம் பார்க்கிறோம். கோயம்புத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்திருக்கு, தர்ஷா குப்தா...அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்துக்கு டிரஸ் பண்ணிட்டு வந்திருக்காங்க...சும்மா சொன்னேன்" என்றார்.

இவரது கருத்துக்கு அங்கு வந்திருந்த ரசிகர்களும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். இந்த கருத்து இணையத்திலும், பிரபலங்கள் மத்தியிலும் சர்ச்சையானது. நடிகர் சதீஷுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வந்தனர். நடிகரும் இயக்குநருமான நவீன், "சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணியவேண்டும் என்பதை நீங்கள் சொல்வது கூட தவறு தான்" என்றார்.

இதையடுத்து, நடிகர் சதீஷ் இது குறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தர்ஷா தான் தன்னிடம் இதை பற்றி பேசியதாக கூறியிருந்தார்.

தர்ஷா, "நான் இன்று சன்னி லியோனை விட பக்காவாக உடையணிந்து வந்திருக்கிறேன். அவர் எப்படி வருகிறார் என்று பார்க்கலாம்" என கூறினார் என்றார் சதீஷ். சன்னி லியோன் புடவையில் வந்ததும் தர்ஷா சற்று மனமுடைந்ததாக தெரிவித்தார். இதை கேட்ட பிறகு "இது நல்ல விஷயமா இருக்கே" என சதீஷ் கூற, "நீங்கள் மேடையில் நான் அப்செட் ஆனதை சொல்லுங்கள்" என தர்ஷா தன்னிடம் சொன்னதாக சதீஷ் தெரிவித்தார்.

மேலும், ஆடை என்பது பெண்கள் ஆண்கள் இரு பாலினருக்கான உரிமை, சுதந்திரம் எனவும், இரு நண்பர்கள் சாதாரணமாக பேசியது சர்ச்சையாகிவிட்டதாக விளக்கம் தெரிவித்திருந்தார். மேலும் இனி இது போன்ற விஷயங்களில் கவனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவ, தர்ஷா இதற்கு டிவிட்டரில் பதிலளித்திருந்தார். சதீஷ் இப்படி பழியை என் மேல் போடுவது சரியா? என கேள்வியெழுப்பியவர், "யாராவது என்ன பத்தி ஸ்டேஜ் ல அசிங்கமா பேசுங்க னு சொல்லுவாங்களா?" என்றார். மேலும், அன்றே தன்னை இந்த விஷயம் பாதித்ததாகவும், ஆனால் பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றார். "இன்று இப்படி கூறுவது சரியில்லை" எனக் கூறி, சதீஷ், சன்னி லியோன், பாடகி சின்மயீ, பாடகர் ஸ்ரீநிவாஸ் மற்றும் இயக்குநர் நவீன் ஆகியோரை டேக் செய்திருந்தார் தர்ஷா.

இந்த எதிர்மறை கருத்துகள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?