Ponniyin Selvan Twitter
சினிமா

Ponniyin Selvan : நீலாம்பரி to அனிதா - பொன்னியின் செல்வன் சாயலில் இருந்த தமிழ் படங்கள்

Keerthanaa R

மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. 

நடிகர்கள் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. 

பொன்னியின் செல்வனை மூன்று தலைமுறைகளாகப் படமாக்க முயற்சிகள் மேற்கொண்டு, அது நடக்க முடியாமல் போனது நாம் அறிந்ததே. ஆனால், பொன்னியின் செல்வன் கதையின் தாக்கம், அவ்வப்போது ஓரிரு கதாபாத்திரங்கள் வழி, திரைக்கதை, அல்லது காட்சிகளின் வழி தமிழ் திரைப்படங்களில் இருந்து வந்துள்ளது. அதை இங்கு பார்க்கலாம்...

படையப்பா - நீலாம்பரி - சந்திரா - நந்தினி:

பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய புள்ளி நந்தினியின் கதாபாத்திரம். தன் காதலனை கொன்ற கோபம், ராஜ வம்சத்தினரால் தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் போன்ற காரணங்களுக்காக சோழர்களை பழிவாங்க துடிக்கும் பெண்! தன் நலனை மட்டுமே முன்னிறுத்தி, அதற்காக யாரையும் பகடையாக பயன்படுத்திக் கொள்பவள். அழகும் வன்மமும் கலந்த கல்கியின் சிங்கப்பெண்! 

இவளது சாயலில் உருவானது தான் படையப்பா படத்தில் வந்த நீலாம்பரி (ரம்யா கிருஷ்ணன்) இதை ரஜினியே கூட ஒரு மேடையில் சொல்லிருந்தார்.

வடசென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்த சந்திரா கதாபாத்திரமும் நந்தினியின் சாயலை வெளிப்படுத்தும்! 

முதல் மரியாதை - குயில் - பூங்குழலி

சமுத்திர குமாரி. அழகான பெண். நல்ல குரல் வளம்.  கடலின் காதலி. துடுக்காக பேசும் குணம், தைரியசாலி. இருளை கண்டு பயம் இல்லை, மனிதர்கள், அவர்களது சுயநல குணத்தை பார்த்தால் மட்டும் சற்று அச்சம். இதுதான் கல்கி பூங்குழலிக்கு கொடுக்கும் வர்ணனை. 

இதே சாயலில் உருவானது தான், முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற குயில் கதாபாத்திரம் (ராதா). புத்தகம் வாசித்தவர்களுக்கு, பூங்குழலியை உருவகப்படுத்திக்கொள்ளக் குயில் உதவினாள். 

செக்க சிவந்த வானம்:

பொன்னியின் செல்வன் கதையில் அரியணைக்கு இருக்கும் போட்டி, இந்த படத்திலும் இருக்கும். சுந்தர சோழன் உடல் நலம் குன்றி இருக்கையில், அடுத்த அரசன் கரிகாலனா? அருள்மொழியா? என்ற போராட்டம் தான் செக்க சிவந்த வானத்தின் அடிப்படை கதைக்களம். 

ஆதித்த கரிகாலனாக வரதன் (அரவிந்த் சாமி), இலங்கையிலிருந்த அருள்மொழியாக துபாயில் தியாகு (அருண் விஜய்). இவர்களை ஒன்றிணைக்கப் போராடும் தூதுவன் வந்தியத்தேவனாக ரசூல் (விஜய் சேதுபதி). 

வரலாற்று படைப்புகளைத் தழுவி படமாக்குவது மணிரத்னத்தின் தனித்துவமான ஸ்டைல்களில் ஒன்று என்பதனாலும், இந்த படத்தை நம்மால் பொன்னியின் செல்வனோடு ஒப்பிட முடிகிறது.

பாகுபலி:

இன்று தமிழ் தெலுங்கு திரை ரசிகர்கள் பொன்னியின் செல்வனை பாகுபலியோடு ஒப்பிட்டு டிவிட்டரில் ஃபேன் வார்கள் நடக்கிறது. ஆனால், பாகுபலியில் இடம்பெற்ற நிறைய காட்சிகள் பொன்னியின் செல்வன் நாவலின் சாயலாக தான் தோன்றுகின்றன. 

1.அருள்மொழி வர்மன் பொன்னி நதியில் விழுந்த போது, ஊமைராணி காப்பாற்றிக் கொடுத்தாள். அவளது கைகள் மட்டுமே குழந்தையை பிடித்த வண்ணம் தண்ணீருக்கு மேல் தெரியும். அமரேந்திர பாகுபலியின் இன்ட்ரோ இது தான்!

2.மஹேந்திர பாகுபலி யானை பிரியன் - அருள்மொழி வர்மனைபோல

3.சிறிய பழுவேட்டரையரின் சாயல்  கட்டப்பாவின் கதாபாத்திரங்களில் தென்படும். 

ஆயிரத்தில் ஒருவன்: 

கார்த்தி, ரீமா சென் மற்றும் ஆண்ட்ரியா நடித்துள்ள இந்த திரைப்படத்தின் கரு, சோழர்கள் பற்றிய ஒரு ஆய்வு தான். பாண்டியர்களின் சிலை ஒன்றை எடுத்து சென்ற சோழர்களைத் தேடிய பயணம். அந்த சிலையை தேடி வருபவள் அனிதா (ரீம சென்). அவளது கதாபாத்திரம் நந்தினியின் குணங்களை தொட்டு இருக்கும். அனிதா பாண்டிய வம்சத்தை சேர்ந்தவள் தாம். அதனால் தான் அந்த சிலையை கண்டுபிடிக்க அவள் கடும் போராட்டங்களை எதிர்கொள்வாள். 

தன்னை தூதுவளாக அறிமுகப்படுத்திக் கொள்வாள் அனிதா. ஆனால் உண்மையில் தூதுவன் ( வந்தியத்தேவன்) முத்து கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி தான்.

இப்படி, பல கதாபாத்திரங்கள் மூலமாக பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவில் அவ்வப்போது எட்டிப்பார்த்துக் கொண்டு தான் இருந்தது. 

இந்த படங்கள் அல்லாமல், நீங்கள் இதுவரை பார்த்த படங்களில் பொன்னியின் செல்வன் தழுவலை பார்த்ததுண்டா? 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?