Shiva Rajkumar : "சாரே கொல மாஸ்" - சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுத்த சிவாண்ணா யார் தெரியுமா? Twitter
சினிமா

Jailer: "சாரே கொல மாஸ்" - சூப்பர் ஸ்டாருக்கே டஃப் கொடுத்த Shiva Rajkumar யார் தெரியுமா?

ஜெயிலர் படத்தில் கன்னட திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாக இருந்துவரும் சிவராஜ்குமாரின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் ரசிகர்களை முறுக்கேற்றியது. தியேட்டரில் தமிழ் ரசிகர்கள் விழிப்பிதுங்கி பார்த்துக்கொண்டிருக்கும் சிவராஜ்குமார் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

Antony Ajay R

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் ரஜியுடன் நடித்த ஜாக்கி ஷார்ஃப், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமாரையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

குறிப்பாக கன்னட திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாக இருந்துவரும் சிவராஜ்குமாரின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் ரசிகர்களை முறுக்கேற்றியது.

ஸ்டைலிலும் மாஸிலும் தலைவருக்கே டஃப் கொடுக்கிறாரே... யாருப்பா இவரு என தமிழ் ரசிகர்கள் விழிப்பிதுங்கி பார்த்துக்கொண்டிருக்கும் சிவராஜ்குமார் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.



சிவ நாகராஜு புட்டசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கன்னட பழம்பெரும் நடிகர் ராஜ் குமாரின் மூத்த மகனாவார். இவரை சிவராஜ்குமார் என மக்கள் அறிவர். இன்னும் நெருக்கமாக ரசிகர்கள் இவரை சிவாண்ணா என அழைக்கின்றனர்.

சிவராஜ்குமார் 1962ம் ஆண்டு ஜூலை 12ல் இவர் பிறந்தார். சென்னை தான் இவர் பிறந்த இடம்! சென்னை பல்கலைகழகத்தில் சிவா, சென்னையில் தான் நடிப்பும் கற்றுக்கொண்டார்.

சிவராஜ்குமார் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் ராகவேந்திர ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார். இரண்டு சகோதரிகள் லக்‌ஷ்மி மற்றும் பூர்ணிமா. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை அறியாதவர் இருக்க முடியாது. அவரது மரணம் சமீபத்தில் சிவராஜ்குமாரை நிலைகுலைய வைத்த சம்பவமாகும்.

சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்கும் இவர், குழந்தை நட்சத்திரமாக 1974ம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.


தனது 24 வயதில் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் ஆனந்தம் (1986) படத்தில் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

ஆனந்த் படத்துக்காக இந்தியன் எக்ஸ்பிரஸின் சிறந்த நடிகருக்கான எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுக்கொடுத்தது. அவரது அடுத்தடுத்த படங்களான ரத சப்தமி மற்றும் மனமெச்சிடா ஹூடுகி வெற்றி பெறவே ஹாட்ரிக்-ஹீரோ என்ற அடை மொழியைப் பெற்றார்.

அடுத்தடுத்து சிறந்த கதைகளை நடித்து வந்தார். இவரது கதாப்பாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தன.

இவரது திரைப்படங்களில் சில சிறப்புகள் இருக்கின்றன. சுக்ரீவா என்ற படம் 18 மணி நேரத்தில் எடுக்கப்பட்டது. செலுவே நின்னே நோடலு என்ற திரைப்படம் 7 உலக அதிசயங்களில் படமாக்கப்பட்டது.

ஜெய்லர் நீங்கலாக இவர் 125 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது வேதா திரைப்படம் கடந்த டிசம்பரில் வெளியானது. கன்னட சினிமாவில் முடிசூடா மன்னனாக வலம் வருகிறார்.

ஜெய்லர் போலவே தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் படத்திலும் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். பிரபுதேவா உடன் ஒரு படத்தில் இணையவுள்ளார். தமிழ் ரசிகர்கள் சிவாண்ணாவை கொண்டாட இன்னும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன!



2010ம் ஆண்டு ஜீ கன்னடத்தில் ஒளிபரப்பான நானிருவதே நிமககி என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சித் துறையில் காலடி எடுத்து வைத்தார். மானச சரோவரா என்ற சீரியலையும் தயாரித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருத்தவரை சிவராஜ்குமார், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சரேகோப்பா பங்காரப்பாவின் மகள் கீதாவை 1986ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிருபமா, நிவேதிதா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

சிவராஜ்குமார் நடிப்பில் 2கே கிட்ஸும் பார்க்க வேண்டிய 10 படங்களை பரிந்துரைக்கிறோம்,

1. ஓம் (1995)
2. ஆனந்த் (1986)
3.சிக்குரிடா கனாசு (2003)
4.ஜோகி தி கிங்(2005)
5. ஏ.கே 47 (1999)
6. இன்ஸ்பெக்டர் விக்ரம் (1989)
7. கத்திப்புடி(2013)
8. தகரு (2018)
9. கில்லிங் வீரப்பன் (2016)
10. மஃப்டி (2017)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?