சிம்பு வாய்ஸ், விஜய் டான்ஸ்! STR குரலில் விஜயின் அடுத்த பாடல்? twitter
சினிமா

Varisu : சிம்பு வாய்ஸ், விஜய் டான்ஸ்! STR குரலில் விஜய்யின் அடுத்த பாடல்?

Keerthanaa R

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் அடுத்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடிக்கும் படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சங்கீதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல், ரஞ்சிதமே கடந்த மாதம் வெளியானது. நடிகர் விஜய் மற்றும் பின்னணி பாடகி மானசி பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

ரஞ்சிதமே பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த பாடல், முன்னர் வெளியான உளவாளி திரைப்படத்தில் இடம்பெற்ற 'மொச்சக்கொட்ட பல்லழகி' பாடலின் காபி என சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு விளக்கமளித்த பாடலாசிரியர் விவேக், ரஞ்சிதமே பாடல், மொச்சக்கொட்ட பல்லழகி பாடலுக்கு ட்ரிப்யூட் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் அடுத்த பாடல் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியிருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 1 ஆம் தேதி இரண்டாவது சிங்கிளின் ப்ரோமோ வெளியாகும் எனவும், பாடல் 4 ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு, சிம்பு பாடல் பாடவுள்ளார் என்கிற தகவல் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

எனினும் இன்னும் படக்குழுவினரிடமிருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?