Google Doodle : இந்திய நடிகைக்கு டூடுள் வெளியிட்ட கூகுள் - ஸ்ரீதேவி யார் தெரியுமா? Twitter
சினிமா

Google Doodle : இந்திய நடிகைக்கு டூடுள் வெளியிட்ட கூகுள் - 'ஸ்ரீதேவி' யார் தெரியுமா?

Antony Ajay R

நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு டூடுஒல் வெளியிட்டு கௌரவித்துள்ளது கூகுள்.
பழம்பெரும்ன் நடிகைக்கு கூகுள் அஞ்சலி செலுத்தியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கூகுள் உலகம் முழுவதும் பெருமளவில் பயன்படுத்தப்படும் தேடுபொறி ஆகும். இதன் முகப்புப் பக்கத்தில் மும்பையைச் சேர்ந்த பூமிக முகர்ஜி என்பவர் வடிவமைத்த ஓவியம் ஸ்ரீதேவியின் நினைவைக் கூறும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்த ஸ்ரீதேவி 1963ம் ஆண்டு ஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பனாக பிறந்தார்.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழி சினிமாவிலும் அறியப்பட்டவராக இருந்தார் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமல், ரஜினி என இன்றைய சூப்பர் ஸ்டார்களுடன் நடிப்பில் போட்டிப்போட்டார்.


எல்லா மொழியிலும் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 4 ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றிருந்தார் ஸ்ரீதேவி. இந்தியாவின் கௌரவ விருதான பத்ம ஸ்ரீ விருதை பெற்றிருந்தார்.

அவர் கடைசியாக நடித்த மாம் படத்துக்கு அவரது மறைவுக்கு பிறகும் தேசிய விருது கிடைத்தது.

விருதுகளைத் தாண்டி ஸ்ரீதேவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது அவரது காலத்தில்.

2018ம் ஆண்டு துபாயில் குடும்ப நிகழ்வில் பங்கேற்ற ஸ்ரீதேவி பிப்ரவரி 24ம் தேதி மறைந்தார். அவரது மரணத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து அவரது ரசிகர்கள் அஞ்சலி செய்தனர்.



ஸ்ரீதேவி திரைப்படத் தயாரிப்பாளரான போனிக் கபூரை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

ஸ்ரீதேவியின் நினைவுகளை இன்றும் திரைத்துறையினரும் ரசிகர்களும் போற்றி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?