Actor Vimal Twitter
சினிமா

நடிகர் விமல் மீது ரூ.5 கோடி பண மோசடி புகார்

Priyadharshini R

களவாணி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் விமல். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் விமலுக்கு ஒரு ரீச் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடித்த படங்கள் வரிசையாகத் தோல்வியடைந்தன.

சமீபத்தில் அவர் நடித்த விலங்கு என்ற வெப்சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகர் விமல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் புகார் அளித்துள்ளார்.

Actor Vimal

அந்த மனுவில் மன்னர் வகையறா படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக ரூ.5 கோடி வாங்கியதாகவும், அந்தப் படத்தின் லாபத்திலும் பங்கு தருவதாகவும் விமல் தெரிவித்தார்.

ஆனால் என்னிடம் வங்கிய கடன் தொகை ரூ.5 கோடியை நடிகர் விமல் திருப்பித்தரவில்லை. அவர் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எனக்குத் தரவேண்டிய ரூ.5 கோடியைத் திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டார்.

பணத்தைக் கேட்டால் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நடிகர் விமல் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, அவரிடம் இருந்து ரூ.5 கோடி பணத்தைத் திரும்ப வாங்கி தரும்படி வேண்டுகிறேன் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?