Thalapathy 68 அப்டேட் : ”Script எப்பவோ ரெடி!” விஜய் - வெங்கட் பிரபு படத்தில் யார் யார்?  ட்விட்டர்
சினிமா

Thalapathy 68 Update: ”Script எப்பவோ ரெடி!” விஜய் - வெங்கட் பிரபு படத்தில் யார் யார்?

Keerthanaa R

இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

விஜயதசமியை முன்னிட்டு திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இவர் ஏற்கனவே சென்னை 28, மங்காத்தா, கோவா, மாநாடு போன்ற படங்களை இயக்கியவர். விஜய்யுடன் முதன் முறையாக கைக்கோர்க்கிறார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

புதிய கீதை படத்திலிருந்து 20 ஆண்டுகள் கழித்து, மீண்டும் விஜய் படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார் யுவன்.

இந்த படத்திற்கு தலைப்பை இன்னும் அறிவிக்கவில்லை. விஜயதசமியை முன்னிட்டு பூஜைக்கு படத்தின் ஸ்க்ரிப்ட்டை கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம்.

இதற்கு பதிலளித்திருந்த வெங்கட் பிரபு, “நீங்கள் கதையில் கரெக்‌ஷன் சொல்லமாட்டிர்கள் என்றால் சொல்கிறேன். ஸ்க்ரிப்ட் எப்பவோ ரெடி. ஏற்கனவே 15 நாள் ஷூட்டிங் முடிந்தது” என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், படத்தின் பூஜை குறித்த வீடியோவை வெளியிட்டு, படக்குழு குறித்த அப்டேட்டையும் கொடுத்துள்ளனர்.

விஜய் - வெங்கட் பிரபு படத்தில் யார் யார்?

  • விஜய்

  • பிரசாந்த்

  • பிரபு தேவா

  • லைலா

  • சினேகா

  • மீனாட்சி சௌத்ரி

  • மோகன்

  • ஜெயராம்

  • அஜ்மல் அமீர்

  • யோகி பாபு

  • விடிவி கணேஷ்

  • பிரேம்ஜி

  • வைபவ்

  • அரவிந்த் ஆகாஷ்

  • அஜய் ராஜ்

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?