சூர்யா டிவிட்டர்
சினிமா

விக்ரம் : ரோலக்ஸ் காட்சியில் தீப்பிடித்த திரை; அதிர்ந்த ரசிகர்கள் - வீடியோ வைரல்

Keerthanaa R


லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. வெளியான நான்கு நாட்களில் 175 கோடி வசூல் சாதனை படைத்துள்ள விக்ரம் படத்தைக் காண மக்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நீண்ட காலத்துக்கு பின் ஒரு தமிழ் படத்திற்கு ரிபீட்டட் ஆடியன்ஸ் வருகை அதிகரித்திருக்கிறது.

திரை தீப்பிடிக்கும்

படத்தின் வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுக்கு ஒரு லெக்சஸ் கார், உதவி இயக்குநர்களுக்கு டிவிஎஸ் பைக் என அன்பைப் பரிசு மழையாகக் கமல் பொழிந்தார். இந்த செய்தி ஒரு புறம் அனைவரின் கவத்தை ஈர்க்க, இன்னொரு புறம் 'திரை தீப்பிடிக்கும்' சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

புதுச்சேரி காலாபட்டு என்ற இடத்தில் உள்ள ஜெயா தியேட்டரில் நேற்று படம் திரையிடப் பட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு ஓரமாக திடீரென ஸ்க்ரீன் தீபற்றி எரியத் தொடங்கிவிட்டது. சூர்யாவின் காட்சி திரையில் தோன்றும்போது, பிஜிஎம் உடன் சேர்ந்து தீயாக தோன்றியுள்ளார் சூர்யா.

இதனால் அலறியடித்துக்கொண்டு ரசிகர்கள் வெளியேற தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் திரையரங்கை அடையும் முன் ஸ்க்ரீன் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிவிட்டது.

இதனால் சற்று நேரம் திரையரங்கம் பரபரப்புடன் காணப்பட்டது. சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு ஏற்பட்டதால் தீ பிடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?