7ஆம் அறிவு படத்தில் வந்த Reservation வசனம்; நீக்கச் சொன்ன சூர்யா, மறுத்த உதயநிதி - ஏன்? twitter
சினிமா

7ஆம் அறிவு படத்தில் வந்த Reservation வசனம்; நீக்கச் சொன்ன சூர்யா, மறுத்த உதயநிதி - ஏன்?

இந்த வசனத்தை நீக்கவேண்டும் என நடிகர் சூர்யா உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். ஏழாம் அறிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் தயாரித்தது. இதனால் தான் சூர்யா, தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலினிடம் இந்த கோரிக்கையை வைத்தார்.

Keerthanaa R

ஏழாம் அறிவு திரைப்படத்தில் இடம்பெற்ற இட ஒதுக்கீடு தொடர்பான வசனத்தை நடிகர் சூர்யா நீக்கக்கோரி தன்னிடம் சொன்னதாகவும், அப்போது தான் அரசியலில் இல்லாததால் அது தனக்கு புரியவில்லை எனவும் கூறியுள்ளார் அமைச்சர், நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

கடந்த 2011ஆம் ஆண்டு சூர்யா, ஸ்ருதிஹாசன், நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஏழாம் அறிவு.

இந்தியாவிலிருந்து சீனா சென்ற போதிதர்மரின் ஆற்றல்களை மீட்டெடுக்க அவரது வம்சாவளியினரை கண்டுபிடிப்பதும், இந்தியாவை சூழவிருக்கும் ஆபத்தை தடுக்க இந்த போதிதர்மரின் சக்திகளை பயன்படுத்துவது போல கதையமைக்கப்பட்டிருக்கும்

போதிதர்மரை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் மாணவியாக நடித்திருப்பார் ஸ்ருதி ஹாசன். சூர்யா தான் போதிதர்மரின் வம்சத்தை சேர்ந்தவர்.

இந்த ஆராய்ச்சிகள் பற்றிய கலந்துரையாடல் காட்சி ஒன்றில் இட ஒதுக்கீடு பற்றிய வசனங்கள் இடம்பெற்றிருக்கும்.

தமிழை குறைக்கூறும் ஒருவருக்கு பதிலளிக்கும் அந்த வசனத்தில், இட ஒதுக்கீடு, சிபாரிசு, ஊழலில் இந்தியா உழன்றுக்கொண்டிருப்பதால் தான் திறமை உள்ளவர்கள் எல்லாம் வெளிநாடுகளை நாடிச் செல்கின்றனர் என்று பேசியிருப்பார் ஸ்ருதி ஹாசன்.

இந்த வசனத்தை நீக்கவேண்டும் என நடிகர் சூர்யா உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். ஏழாம் அறிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் தயாரித்தது. இதனால் தான் சூர்யா, தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலினிடம் இந்த கோரிக்கையை வைத்தார்.

ஆனால் படத்தில் அந்த வசனம் இடம்பெற்றது, மேலும் அந்த காட்சி ஸ்ருதி ஹாசனை பற்றியும் பேசவைத்தது.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன் தானே சரியான அரசியல் புரிதல் இல்லாமல் இருந்ததாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “2011ல் 7ஆம் அறிவு படத்தை பார்த்துவிட்டு அதில் இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றிருந்த வசனம் நீக்கப்படவேண்டும் என நடிகர் சூர்யா என்னிடம் கேட்டுக்கொண்டார். இயக்குநர் அவரது அரசியல் புரிதலுக்கு அந்த வசனத்தை வைத்திருந்தார்.

அப்போது எனக்கு பெரிதாக அரசியல் புரிதல் இல்லை என்பதால், இருக்கட்டும் என விட்டுவிட்டேன். என்னுடைய தயாரிப்பில் வெளியான படத்தில், அப்படி ஒரு வசனம் இருந்திருக்க கூடாது என இப்போது உணர்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?