நடிகை வனிதா மீது மர்ம நபர்  தாக்குதல் - பிக்பாஸ் பிரதீப் ஆதரவாளர் தான் காரணமா?
நடிகை வனிதா மீது மர்ம நபர் தாக்குதல் - பிக்பாஸ் பிரதீப் ஆதரவாளர் தான் காரணமா? Twitter
சினிமா

நடிகை வனிதா மீது மர்ம நபர் தாக்குதல் - பிக்பாஸ் பிரதீப் ஆதரவாளர் தான் காரணமா?

Priyadharshini R

பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வரும் தன் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக எக்ஸ் பக்கத்தில் நடிகை வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா கலந்துக் கொண்டுள்ளார்.

ஜோவிகாவுக்காக வனிதா விஜயகுமார் சமூகவலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இதுதவிர வேறு யூடியூப் சேனலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டதாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நள்ளிரவு 1 மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் ‘ரெட் கார்டு கொடுக்குறீங்களா’ என்று கேட்டு தன்னை மோசமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்ததாக வனிதா அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டி போட்டியாளர் பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த இணையத்தலமே ப்ரதீப்பைய் பற்றி தான் பேசியது. ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் முதல் இடத்தை பிரதீப் ஆண்டனி என்ற ஹாஷ்டாக் பிடித்தது.

தொடர்ந்து பிரதீப் ஆண்டனிக்கு எதிராக தனது கருத்துகளை வனிதா சமூக வலைதளங்களில் முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தன் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?