விஜய்  வாரிசு
சினிமா

Thalapathy 66 : வெளியானது வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - இரவு 12 மணிக்கு அடுத்த அப்டேட்?

Antony Ajay R

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபலியுடன் இணைந்திருக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை ரிலீசாகி உள்ளது. இந்த படத்துக்கு வாரிசு எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படம் விஜய்க்கு 2000களில் பெரு வெற்றி பெற்றுதந்த பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களைப் போல காதல், குடும்பம், உறவுகள் போன்ற களங்களைத் தொட்டுச் செல்லும் கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

குடும்பங்களை கனெக்ட் செய்யும் விதமாகவே இந்த படத்துக்கு வாரிசு எனப் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வரசுடு. கடந்த 1993ம் ஆண்டில் நாகர்ஜுனா நடிப்பில் தெலுங்கில் இதே பெயரில் ஒரு திரைப்படம் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் இயக்குநர் வம்சி ஏற்கெனவே தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகங்களும் பெயர் சொல்லும் விதமாக தோழா படத்தை எடுத்திருந்தார். கார்த்தி மற்றும் நாகர்ஜுனா நடித்த இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியைப் பெற்றது.

ஃபர்ஸ்ட் லுக்கில் கோர்ட் சூட்டுடன் விஜய் அமர்ந்திருக்கும் தொனி அவர் ஒரு பணக்கார குடும்பத்தின் வாரிசாக நடித்திருப்பாரோ? என்ற கேள்வியை எழுப்பினாலும் கதை குறித்து இது வரை எந்த தகவலும் சலசலக்கப்படவில்லை. சென்னை கோகுலம் ஸ்டூடியோ, ஓ.எம்.ஆரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இது தவிர இன்று இரவு 12 மணிக்கு அல்லது நாளை விஜய் பிறந்தாளன்று ஒரு அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?