வட சென்னை 2 எப்போது? - வெற்றிமாறன் சொன்ன பதில்! Twitter
சினிமா

வட சென்னை 2 எப்போது? - வெற்றிமாறன் சொன்ன பதில்!

சில நாட்களுக்கு முன்னர் வாத்தி பட விழா மேடையில் தனுஷ் பேசிக்கொண்டிருக்கும் போது ரசிகர்கள் கீழிருந்து வட சென்னை 2 எனக் கூச்சலிட்டனர். அப்போது தனுஷ், "வட சென்னை 2 எப்போது எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக வரும்" என பதிலளித்தார்.

Antony Ajay R

கடந்த 2018ம் ஆண்டு வெளியான வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி கடந்த ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகமாக கேட்கப்பட்டதாகும்.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என இருவரும் இணைந்த எல்லா படமுமே ஹிட் ஆகின, ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக அமைந்தது.

வட சென்னை 2 படத்தை எப்போது எதிர்பார்க்கலாம் என்ற கேள்விக்கு இறுதியாக விடை கிடைத்தது.

சில நாட்களுக்கு முன்னர் வாத்தி பட விழா மேடையில் தனுஷ் பேசிக்கொண்டிருக்கும் போது ரசிகர்கள் கீழிருந்து வட சென்னை 2 எனக் கூச்சலிட்டனர்.

அப்போது தனுஷ், "வட சென்னை 2 எப்போது எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக வரும்" என பதிலளித்தார்.

நேற்று விடுதலை படவிழாவில் வெற்றிமாறனிடமும் வட சென்னை 2 குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பினர்.

அப்போது பதிலளித்த வெற்றிமாறன், "விடுதலை படத்தின் 2ம் பாகத்துக்கு பிறகு வாடிவாசல் படத்தை தொடங்குகிறோம். அது முடிந்த பின்னர் வட சென்னை இரண்டாம் பாகம் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

விடுதலை படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், கிஷோர், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மார்ச் 31ம் தேதி விடுதலை வெளியாக இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?