Nayanthara: முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் விக்கி - நயன்; விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி ட்விட்டர்
சினிமா

Nayanthara: முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடும் விக்கி - நயன்; விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

இன்று முதலாம் ஆண்டு திருமண நாளை ஒட்டி, மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

Keerthanaa R

முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்து, நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது. அடுத்த 3 மாதங்களில், (அக்டோபர் மாதம்) தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர் நயன், விக்கி தம்பதி. அவர்களுக்கு உயிர் - உலக் என பெயரிட்டுள்ளதையும் தெரிவித்தனர்

இயக்குநர் விக்னேஷ் சிவன், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், மனைவி நயன்தாராவை கொண்டாடத் தவறியதில்லை.

ரசிகர்கள் பலரும் இந்த ஜோடியை ‘கபுள் கோல்ஸ்’ எனக் கொண்டாடியும் வருகின்றனர்

இந்நிலையில், இன்று முதலாம் ஆண்டு திருமண நாளை ஒட்டி, மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர், “ஒராண்டில் நிறைய தருணங்கள், ஏற்றத் தாழ்வுகள், சோதனைகள்... ஆனால் அளவுகடந்த அன்புடன் காத்திருக்கும் என் குடும்பத்திடம் வரும்போது நம்பிக்கை பிறக்கிறது. எனது கனவுகளையும், லட்சியங்களையும் நோக்கி ஓட ஊக்கமளிக்கிறது”

நயன்தாரா-விக்னேஷ் சிவன்

”எனது ’உயிரும் உலகமும்’ என் எல்லாவற்றையும் தாங்கிப்பிடிக்கிறது.

நம் குடும்பம் நமக்கு தரும் வலிமை எல்லா மாற்றத்தையும் ஏற்படுத்தும். சிறந்த மனிதர்களின் அன்பால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் நயன்தாரா தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் சில எக்ஸ்லூசிவ் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

ரசிகர்களும், திரைத்துறையினரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?