உலக உணவு தினம்: விஜய் முதல் ரஜினி வரை நம்  நட்சத்திரங்களின் விருப்ப உணவு எது தெரியுமா?
உலக உணவு தினம்: விஜய் முதல் ரஜினி வரை நம் நட்சத்திரங்களின் விருப்ப உணவு எது தெரியுமா?  Twitter
சினிமா

உலக உணவு தினம்: விஜய் முதல் ரஜினி வரை நம் நட்சத்திரங்களின் விருப்ப உணவு எது தெரியுமா?

Antony Ajay R

மனித இயக்கத்தின் அடிப்படையே பசியும் உணவும் தான். ஒரு வேளை உணவுக்காக மொத்த வாழ்க்கையிலும் கஷ்டப்படுபவர்களும், வித்தியாசமான சுவைகளை தேடித் தேடி உண்பவர்களும், எதன் மீதும் பற்றற்ற துறவிகளும், எல்லாவற்றையும் கொண்டிருக்கும் சுகவாசிகளும் தினசரி சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். இந்த சாப்பாட்டை கொண்டாட்டமானதாக மாற்றும் பலர் இங்குள்ளனர்.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்த பண்டிகையானாலும் நல்ல சாப்பாடு தான் நம் முதல் கொண்டாட்டம். பசியும் ருசியும் இல்லாவிட்டால் பலர் எப்போதே வாழ்வில் பற்றற்றவர்களாக போயிருப்போம், வாழ்க்கையை சுவை மிகுந்த ஒன்றாக மாற்றும் உணவை போற்றும் உணவு தினம் இன்று. இந்த நாளில் நம் திரை நாயகர்களுக்கு பிடித்த விருப்பமான உணவு என்ன எனப் பார்க்கலாம்...

தளபதி விஜய்

சமீபத்தில் சென்னை வந்து சென்ற நடிகர் ஷாரூக்கான் விஜய் தனக்கு அளித்த சுவையான உணவு குறித்து ட்வீட் செய்திருந்தார். திரைத்துறையில் தனக்கு பிடித்தமானவர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவது தான் விஜய்க்கு விருப்பமானதாக இருக்குமாம். யாராக இருந்தாலும் வீட்டு அழைத்து விருந்து வைத்துவிடுவார்.

விருந்து எல்லாம் எவ்வளவு தடல்புடலாக இருந்தாலும் விஜயின் ஃபேவரைட் உணவு தோசையும் கறிக்குழம்பும் தானாம். மொறுமொறுப்பான தோசையும் காரசாரமான கறிக்குழம்பும் அவர் நாக்கை பல ஆண்டுகளாக கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது என்கிறார்கள்!

ரஜினிகாந்த்

ரஜினி காந்த் கண்டக்ட்ராக இருந்த போது பரோட்டா, சிக்கன் கறி, மட்டன் கறி என தாறுமாறாக சாப்பிட்டவர். சூப்பர் ஸ்டார் ஆன போதும் பல உணவுகளை சாப்பிட்டு வந்தார். ஃபிட்னஸ் மெயின்டன் செய்யவும் பிற்காலத்தில் உடல்நலக் குறைவினாலும் பல ஃபேவரைட் டிஷ்களை உண்ணமுடியாமல் தவித்து வருகிறார் ரஜினி.

அவரது குடும்பத்தில் எல்லாரும் சைவ பிரியர்களாக இருந்தாலும் ரஜினிகாந்த் அசைவத்தில் அடித்து நொருக்குவார். அவருக்கு நீண்டகால பர்சனல் மேக்கப்மேனாக பணிபுரிந்த முத்தையா வீட்டு மீன் குழம்பு அவருக்கு பிடிக்குமாம். கருவாட்டுக் குழம்பிலும் ஆர்வம் அதிகம்.

எல்லாவற்றையும் விட கோழிக்கறியும் ஆட்டுக்கறியும் தான் ரஜினி காந்தின் ஃபேவரைட் உணவுகள். உடல்நலம் காரணமாக இவற்றை இப்போதெல்லாம் சாப்பிடுவதில்லையாம்.

சூர்யா

சமீபத்தில் அதிக ரசிகர்பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் சூர்யா. தனது வெறித்தனமான நடிப்பு மட்டுமில்லாமல் பக்குவமான பழக்கவழக்கத்தாலும் ரசிகர்களை சென்றடைந்திருக்கிறார் சூர்யா. பிறருக்கு உதவுவதும் பணிவாக இருப்பதும் சூர்யாவின் மீது ரசிகர்களிடம் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியிருக்கின்றன.

சூர்யா தனது 40களைக் அடைந்த பின்னரும் இளமையாக இருக்க அவரது உணவுப் பழக்கம் தான் காரணம் அது ஏன் என்பதை அவரது விருப்ப உணவே செல்லிவிடும். ஆம் அவர் ஒரு தயிர் சாத விரும்பி! அசைவத்தில் சிக்கன் கறிகுழம்பு விருப்பமாம்.

தனுஷ்

தனுஷ் ஒரு சைவம் சாப்பிடும் நபர் என்பது நமக்கு தெரியும். தனது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள சைவ உணவுகளையே எடுத்துக்கொள்கிறார்.

சைவத்தில் என்ன தான் அவருக்குப் பிடித்திருக்கிறது எனக் கேட்டால் காரக்குழம்பு என்பாராம் தனுஷ். இத்துடன் அம்மா சமையல் என்றால் தனுஷுக்கு இன்னும் பிடிக்கும் என்பது கூடுதல் தகவல்.

தினசரி உணவுப் பழக்கத்தில் தோசை, சாம்பார் தனுஷின் விருப்ப உணவு.

கமல் ஹாசன்

கமல் ஓர் அசைவ பிரியர். முனி படத்தில் வரும் ராஜ் கிரண் போல கூச்ச நாச்சமில்லாமல் வெளுத்துகட்டுவாராம், சமீபத்தில் விக்ரம் பட வெற்றி விழாவில் அனைவருக்கும் கறிக்குழம்பு விருந்தளித்து சிறப்பித்திருந்தார் கமல்.

திரையுலகில் இருக்கும் சில ஃபுட்டிகளில் குறிப்பிடத்தக்கவர் கமல். இவருக்கு நண்பர் ரஜினிகாந்த் போலவே சிக்கன் மற்றும் மட்டன் கறிதான் விருப்ப உணவாம்.

அஜித் குமார்

அஜித் உணவு என்றாலே நமக்கு பிரியாணி நினைவு வந்துவிடும். அவருடன் நடித்த பலரும் அஜித்தின் பிரியாணி விருந்து குறித்து பகிர்ந்திருப்பார்கள். மற்றவர்களுக்கு மட்டும் தான் பிரியாணியா? அல்லது தலைக்கும் அதுதான் விருப்பமா?

அஜித் பைக்கில் பல ஊர்களை சுற்றி வருகிறார். பல இடங்களுக்குச் சென்று பலவகை உணவுகளை சாப்பிடுகிறார். பல சுவைகள் தெரிந்த அவரின் நாக்குக்கு பிரியாணி சுவை தான் பிடித்த சுவையாம். அதிலும் ஹைத்ராபாத் ஸ்டைல் பிரியாணி என்றால் கொள்ளை பிரியமாம். பிரியானியைத் தாண்டி மட்டன் கறியும் அவருக்குப் பிடிக்குமாம்.

சிவகார்திகேயன்

2கே கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஸ்ட்ரிக்டாக டயன் மெயின்டைன் செய்வாராம். காபி, டீ எல்லாம் கண்ணால் பார்த்தே வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் ஃபேவரைட் உணவான பிரியானிக்கு நோ சொல்லமாட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?