Vijay fan invited Ajith fans to watch Varisu movie  Twitter
சினிமா

Varisu: ”படம் பாக்க கண்டிப்பா வரணும்” அஜித் ரசிகர்களுக்கு பத்திரிகை வைத்த விஜய் ரசிகர்!

வாரிசு படம் பார்க்க வேண்டுமென அஜித் ரசிகர்கள் வீட்டுக்கு அழைப்பிதழுடன் விஜய் ரசிகர் ஒருவர் சென்றுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Priyadharshini R

வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படம் வாரிசு. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடம் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

அதே சமயத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் நாளை வெளியாகிறது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், வாரிசு படத்தை அஜித் ரசிகர்கள் பார்க்க வர வேண்டும் என பத்திரிகை அச்சடித்து அவர்கள் வீடுகளுக்கே சென்று கொடுத்து வருகின்றனர்.

அந்த பத்திரிக்கையை சும்மா கொடுக்காமல் வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை தாம்பூலத்தில் வைத்து சேர்த்து கொடுத்துள்ளனர். இந்த அழைப்பு அஜித் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?