Rolex Ananthu Suriya via Twitter
சினிமா

விக்ரம் 3 : துரைசிங்கம் டூ ரோலெக்ஸ் - இதுதான் கதையா? மற்றும் லோகியின் ட்வீட்

NewsSense Editorial Team

விக்ரம் மூன்றாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் லீக் ஆகி உள்ளது.

ரோலெக்ஸின் (சூர்யா) வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படத்தின் கதை இருக்கும் எனக் கூறப்படுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நேர்மையான காவல்துறை அதிகாரி துரைசிங்கம் எப்படி ரோலெக்ஸ் ஆனார் என்பதுதான் மூன்றாம் பாகத்தின் கதையாம்.

மாநில பணி டூ மத்திய பணி

எப்படி கைதி திரைப்படத்தின் நீட்சியாக விக்ரம் இருந்ததோ, அதுபோல சிங்கம் படத்தின் நீட்சியாகவே விக்ரம் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் இருக்குமாம்.

நல்லூரில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருந்த துரை சிங்கம், தமது துறையில் பல உச்சங்களைத் தொடுகிறார். தமிழ்நாடு, ஆந்திரம் என மாநில காவல் துறையில் பயணித்த அவருக்கு ஒன்றிய பணி கிடைக்கிறது. மாநில உள்துறை அமைச்சர்களிடம் ரிப்போர்ட் செய்து கொண்டிருந்த அவர் ஒரு கட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு நேரடியாக ரிப்போர்ட் செய்கிறார்.

அவருக்குக் குஜராத் நார்காட்டிக்ஸில் பணி வழங்கப்படுகிறது. அங்கு உள்ள பால் கூட்டுறவு சொசைட்டியில் பணியாற்றிக் கொண்டே மாறு வேஷத்தில் அங்குள்ள போதை கடத்தல் கும்பல் குறித்து தகவல் திரட்டுகிறார்.

எப்படி சிங்கம் இரண்டாம் பாகத்தில் வெறும் பைனாகுலரை வைத்துக் கொண்டு போதை கும்பலை கண்காணிப்பாரோ அதுபோல அதே பைனாகுலரை வைத்துக் கொண்டு குஜராத் கடற்பரப்பைக் கண்காணிக்கிறார்.

இவருக்கு வேலுநாயக்கரின் மருமகன் உதவுகிறார். அதாவது, வேலுநாயக்கரின் மருமகனாக காவல்துறையில் இருந்து பின்னர் உள் அரசியலால் அந்த பணியை உதறித்தள்ளி, ‘போக்கத்தவந்தான் காவல்துறை வேலைக்குப் போவான்' என்று சைக்கிள் கம்பென் தொடங்குவாரே அவரே தான்… ஆம், அனுஷ்காவின் அப்பாதான்.

அனுஷ்காவின் அப்பா

நல்லூர் - நெல்லூர் - ஆப்ரிக்கா - விஜயவாடா - ஆஸ்திரேலியா - மெக்சிகோ

குஜராத் ஜாம்நகரில் துரை சிங்கத்திற்கு ஒரு லீட் கிடைக்கிறது. அந்த நூலைப் பிடித்து அவர் முன்னேறும் போது, வாழ்க்கையில் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது. எந்த போலீஸ் பணியை அவர் நேசித்தாரோ, எந்த காக்கியை அவர் காதலித்தாரோ, விஜயவாடா வெயிலில் கூட ஃபுல் ஹேண்ட் ஷர்ட் போட்டுக் கொண்டு போலீஸ் பணிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தாரோ, அந்த பணி அவருக்குப் பிணியாக மாறுகிறது.

வீட்டில் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள். இதற்கான விடையைத் தேடும் போது போலீஸில் இருக்கும் சில கருப்பு ஆடுகளும், சில முக்கிய அரசியல்வாதிகளும் இதற்குப் பின்னால் இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

நிலைகுலைந்து போகிறார் துரைசிங்கம். வேலையை உதறி தள்ளிவிட்டு, போதைக்கு அடிமையாகி, ‘என்னை என்னைத் தேடி வந்த அஞ்சல' என ஊர் சுற்றுகிறார்.

Twitter

கோவா வாஸ்கோடகாமாவில் அவருக்கு சில அறிமுகங்கள் கிடைக்கின்றன. அதன் மூலமாக திருட்டுத்தனமாக மெக்சிகோ பயணமாகிறார். அங்குச் சர்வதேச போதைக் கடத்தல் குழுக்களான பாப்லோ எஸ்கோபர், எல் சாப்போ குழுக்களின் அறிமுகம் கிடைக்கிறது.

சரியான தலைமை இல்லாமல் ஒரு பெரும் குழு சிதறிக்கிடப்பதைப் பார்க்கிறார். இவர்களை வைத்து தன் குடும்பத்தை அழித்தவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கத் திட்டமிடுகிறார் துரைசிங்கம்.

இந்தியப் போதை வணிக சந்தையை தங்களுக்குக் கைப்பற்ற உதவினால், துரை சிங்கத்திற்கு தாங்கள் உதவுவதாக கூறுகிறார்கள் பாப்லோ எஸ்கோபரின் ஆட்கள்.

இப்படியாக துரைசிங்கம் ரோலக்ஸாக மாறுகிறார், போதை சந்தையின் சர்வதேச தலைவனாக மாறுகிறார்.

இந்த சூழலில்தான் அவர் மூன்று கன்டெயினர் போதைப் பொருட்களைச் சென்னை அனுப்புகிறார்.

இடையில் விக்ரம் புகுந்ததால், மொத்த ஆட்டமும் மாறுகிறது.

அடுத்து ரோலெக்ஸ் என்ன செய்யப் போகிறார் என்பது தான் விக்ரம் 3 படத்தின் கதை.

பின் குறிப்பு : எல்லாம் உருட்டுதான் பாஸ்... விக்ரம் 3 கதை லோகிக்கி மட்டும்தான் தெரியும். அவர் இன்னும் விக்ரம் 2 வெற்றியின் நெகிழ்ச்சியில இருக்கார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?