Vikram - KGF2 Twitter
சினிமா

விக்ரம் முதல் கேஜிஃப் 2 வரை : 2022-ன் டாப் 10 இந்திய திரைபடங்கள் என்னென்ன?

டாப் 10 இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 9 இடங்களை தென்னிந்தியத் திரைப்படங்கள் பிடித்துள்ளன.

Priyadharshini R

1. RRR

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர்.

ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரிட்டிஷ் காலத்தில் நடைபெறும் இந்த கதை பிரம்மாண்ட காட்சிகளுடன் தயாரிக்கப்பட்டது. பலரும் இந்த படத்தை தொழில்நுட்ப ரீதியாக பாராட்டியிருந்தனர்.

சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரான திரைப்படம், 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலிருந்தும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. கோல்டன் க்ளோப் 2023 விருதுகளுக்காக ஆர் ஆர் ஆர் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kashmir Files

2. The Kashmir Files

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 2022 மார்ச் மாதம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியைக் கதைக் களமாகக் கொண்ட இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

3. KGF : Chapter 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான படம் கேஜிஎஃப். கன்னட படமான கேஜிஎஃப்-ன் முதல் பாகம் இந்திய அளவில் பேசப்பட்டதால் பான் இந்தியா மார்கெட்டை குறிவைத்து கேஜிஎஃப் 2 எடுக்கப்பட்டிருந்தது.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரிதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற கேஜிஃப் படம் உலக அளவில் 1000 கோடி வசூலை தாண்டியது.

4. Vikram

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கமலின் இத்தனை கால சினிமா வாழ்க்கையில் விக்ரம் ஒரு முக்கிய படமாக பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் கில்லர் ஆக்‌ஷன் அனைவரையும் தியேட்டர் பக்கம் இழுத்தது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ 432.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

Kantara

5. Kantara

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னடப் படம் காந்தாரா அனைத்து மொழிகளிலும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

உலகளவில் 400 கோடிகளைத் தாண்டி இப்படம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

6. Rocketry

மாதவன் இயக்கி, நடித்த படம் ராக்கெட்ரி. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அந்நிய நாட்டுக்கு இந்தியாவின் ரகசியங்களை விற்றார் என கைது செய்யப்பட்டு, பல வருட சட்டப் போராட்டத்துக்குப் பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.

அவரது வாழ்க்கையை படமாக்கி நடித்திருந்தார் மாதவன். இந்த படம் மாதவனை வேறு இரு பரிமாணத்தில் காண்பித்தது.

7. Major

2008 மும்பை தாக்குதலில் பலியான மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் மேஜர்.

சசி கிரண் டிக்கா இயக்கிய இந்தப் படம் பல்வேறு தரப்பினர்களிடமிருந்து வரவேற்பை பெற்றது.

Dulquer - Mrunal Thakur

8. Sita Ramam

ஹனு ராகவபுடி இயக்கி துல்கர் சல்மான், மிருனாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் சீதா ராமம்.

இப்படம் தெலுங்கு மட்டுமின்றி பிற மொழிகளிலும் 'டப்' செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றது.

Ponniyin Selvan

9. Ponniyin Selvan

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்கியிருந்தார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் இந்த வருடம் வெளியாகி, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் அதிக வரவேற்பயும் வசோலையும் பெற்றது.

10. 777 Charlie

கிரன் ராஜ் இயக்கத்தில் வெளியான 777 சார்லி திரைப்படத்தில் ரக்ஷித் ஷெட்டி, பாபி சிம்ஹா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் கன்னடா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?