கல்லறை Twitter
Good News

100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களுக்கு இறுதி சடங்கு - கோவை பெண்ணின் நெகிழ்ச்சி கதை

Antony Ajay R

மரணம் தான் வாழ்வின் இறுதி. மரணத்தின் போது ஒருவர் மீது நாம் எந்த வித மனப்பான்மையுடன் இருக்கிறோமோ அது தான் முடிவானது. அதற்கு பின் ஒன்றுமில்லை.

ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தான் அவரது வாழ்வு எவ்வளவு பெரியது என்று அறிவோம். இராணுவ வீரர்களுக்கு அவர்களின் தியாகத்தைப் போற்றி அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது.

இந்த வாழ்வையும் மனிதர்களையும் பிரிந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் உரிய மரியாதை கிடைக்கப்பட வேண்டும் என எண்ணுகிறார் கோவையைச் சேர்ந்த காவலர் எம்.அமினா.

ஒவ்வொரு நாளும் எத்தனை மனிதர்கள் ஆதரவாக யாருமின்றி மரணிக்கிறார்கள் தெரியுமா? மருத்துவ - சட்ட பிரிவில் காவலராக இருக்கும் அமினா தனது பணிச் சூழலில் அந்த மாதிரியான பல மரணங்களைக் கடந்து வருகிறார்.

கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் அமினா கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணியை செய்து வருகிறார்.

அமினா

அவர் இதுகுறித்து, "என்னுடைய வேலை உடலை உடற்கூறாய்வு முடித்த உடன் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பது வரைதான். எனினும் சிலர் எந்த அடையாளமும் இல்லாமல் இறப்பது உண்டு. அவர்களது விவரங்களை கண்டறிவது முடியாததாக இருக்கும். நான் அவர்களுக்காக என்ன செய்வது என்று சிந்திக்கும் போது, என்னால் அவர்களுக்கு செய்ய முடிவது இறுதி சடங்கு மட்டும் தான் எனத் தோன்றியது. இது அவர்களின் குடும்பத்தினர் செய்ய வேண்டிய பொறுப்பு" என்று கூறினார்.

மேட்டுப்பாளையம் காவல் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் இது வரை நூறு உடல்களுக்கு மேலாக இறுதி சடங்கு செய்திருக்கிறார் அமினா. அவருடன் பணி புரியும் காவலர்கள் மற்றும் ஜீவ ஷாந்தி என்ற அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் இந்த பணியில் அமினாவுக்கு உதவி வருகின்றனர்.

அமினா தான் செய்யும் சேவையில் அருவருப்பு பார்ப்பதோ அல்லது பயப்படுவதோ கிடையாது எனக் கூறுகிறார் ஜீவ ஷாந்தி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ராஜிக்.

மேலும் அவர், "கொரோனா பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய யாரும் முன்வராத நேரத்திலும் இந்த பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டார் அமினா" என்று கூறினார்.

அமினா பொருளாதார ரீதியில் மிகவும் வசதியான பின்புலத்தைக் கொண்டிருக்க வில்லை என்றாலும் இறுதி சடங்குக்கு ஆகும் செலவுகளை அவரே தான் பார்த்துக்கொள்கிறார். சில நேரங்களில் அவரது சக காவலர்களும் இதற்காக உதவுகின்றனர்.

கல்லறை

"இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடத்தைக் கண்டுபிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் எங்களுக்கு உதவுவார்கள். ஒருவரை அடக்கம் செய்ய குறைந்தது 1500 ரூபாய் செலவாகிறது. என்னுடைய சம்பளம் 25000 ரூபாய் தான் என்பதால் நாங்கள் இந்த செலவுகளை பிரித்துக்கொள்வோம்" என்றார் அமினா.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான அமினா இந்த சேவைக்கு தன் குடும்பமும் உறுதுணையாக இருப்பதாகக் கூறுகிறார். "என் தந்தைதான் காவல்துறை பணியில் சேருவதற்கு உத்வேகமாக இருந்தார், மனரீதியில் மிகவும் சவாலன பணியை செய்தும் சோர்ந்துவிடாமல் இருக்க கணவர் பின்புலமாக இருக்கிறார்" என்று அமினா கூறியுள்ளார்.

அடையாளங்கள் இல்லாமல் எந்த சாதி, எந்த மதம், எந்த ஊர் என எதுவும் தெரியாமல் மரணிக்கும் மனிதர்களையும் அவரது குடும்பத்தில் ஒருவராக கருதி அடக்கம் செய்து வருகிறார் அமினா.

வேலையிலிருந்து நீங்கும் வரை இந்த சேவையைத் தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?