தலைவலி Twitter
ஹெல்த்

அடிக்கடி தலைவலியால் அவதிபடுகிறீர்களா? இந்த 5 உணவை சாப்பிடுங்கள்!

ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் போன்ற உடலில் உள்ள பிரச்னையை மையமாகக் கொண்டு பல்வேறு வகையான தலைவலிகள் உள்ளன.

Priyadharshini R

இன்றைய தலைமுறைக்கு தலைவலி ரொம்ப சாதரணமாக வரக்கூடிய ஒரு பாதிப்பாக இருக்கிறது.

மாறிவரும் வானிலை, மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் தலைவலியை ஏற்படுத்தும்.

ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் போன்ற உடலில் உள்ள பிரச்னையை மையமாகக் கொண்டு பல்வேறு வகையான தலைவலிகள் உள்ளன. தலைவலி வரும்போது மாத்திரையை அடிக்கடி போடக் கூடாது என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக உள்ளது.

இதனை இயற்கையாகவே தடுக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

water

தண்ணீர் குடிக்கவும்

உடலின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

சிறுநீர் தெளிவாக அல்லது நிறமற்றதாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு உடலில் போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியம் என்றும் மருத்துவர் அறிவுறுத்துகிறார். உடலின் மைய வெப்பநிலையை குறைக்க இது உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

கோகம் ஷெர்பெட் ( KOKUM SHERBET)

கோகம் என்பது அசிடிட்டிக்கு பாட்டி வைத்தியம் என்று உள்ளூரிலேயே அறியப்படும் பழம்.

இது கோவா மற்றும் கொங்கன் பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

ஊறவைத்த சப்ஜா விதைகளுடன் (துளசி விதைகள்) ஒரு கிளாஸ் கோகம் செர்பெட்டை மதிய உணவுக்கு சில மணிநேரங்களுக்கு முன் சாப்பிடுமாறு மருத்துவர் அறிவுறுத்துகிறார். இந்த பானம் எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுக்கிறது.

Fruits

தயிர்

மதிய உணவாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ தயிர் மற்றும் சாதம் சாப்பிடுவது தலைவலி மற்றும் அமிலத்தன்மையை மாற்றும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

பழங்கள்

பருவகால பழங்கள் வேண்டும். கோடையில், மாம்பழத்தில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, நரம்புகளை அமைதிப்படுத்துகிறது மற்றும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது.

குல்கந்து பால்

ரோஜா இதழ்கள் சர்க்கரையுடன் இருக்கும்.இது குல்கந்து என்று அழைக்கப்படுகிறது. குல்கந்து பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது மற்றும் தோல் மற்றும் முடிக்கு புத்துணர்ச்சியூட்டுவதாக செயல்படுகிறது.

பாலுடன் குல்கந்த் கலந்து குடித்தால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும். இது தலைவலிக்கு இயற்கையான குளிரூட்டியாகவும் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?