Sex

 

Facebook

ஹெல்த்

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செக்ஸ் உறவுக்குத் தேவையான ஒரு பயிற்சி! - 16

Newsensetn

செக்ஸ் நான்கு கட்டங்களைக் கொண்டது. முதலில் ‘எக்ஸைட்மென்ட்’ எனும் உணர்ச்சிவசப்படுகின்ற நிலை. இரண்டவதாக அந்தப் பரவச உணர்வு தொடரும் ‘பிளாட்டூ’ என்கிற பீடபூமி நிலை. மூன்றாவதாக ‘ஆர்கஸம்; எனப்படுகின்ற உச்சக்கட்ட இன்பத்தை அடையும் நிலை. நான்காவது ஓய்வுநிலை. காம உறவில் இந்த நான்கும் நிகழும் என்பதை மேற்கத்திய அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால், இப்படியான சுழற்சியைக் குறிப்பிடும் நான்கு கட்டங்களைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வாத்ஸாயனர் காமசூத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். காம உறவில் இப்படி நான்கு நிலைகளும் மாறி மாறி வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Sex

உடலிலே பெரிய உறுப்பு எது ?

ஆனால், செக்ஸில் ஈடுபடுவோர் இப்போது நாம் எந்தக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கலவியில் ஈடுபட்ட பிறகு இந்த நிலைகளைப் பற்றி எண்ணிகொண்டோ ஆராய்ச்சி செய்துகொண்டோ இருக்கக் கூடாது. கலவியைத் தவிர மற்ற நினைவுகளை, எண்ணங்களைத் தவிர்த்துவிடுவதே கலவியில் இன்பம் கிடைக்க வழி செய்யும். வேறு ஏதோ நினைத்துக்கொண்டிருந்தால் கலவியால் கிடைக்கக் கூடிய இன்பம் கிடைக்காமல் போகலாம்.

பல தம்பதிகளுக்கு செக்ஸ் வாழ்க்கை சுகமில்லாமல் இருக்கக் காரணத்தைக் காமச்சூத்திரம் சரியாகச் சொல்கிறது. உடலிலே பெரிய உறுப்பு எது? கல்லீரல், நுரையீரல், கால்கள், கைகள்… இல்லை, இல்லை… சருமமே, உடலின் பெரிய உறுப்பு… உடல் முழுக்கப் போர்த்தப்பட்ட நம் தோல்தான் மிகபெரிய உறுப்பு. ஒரு வளர்ந்த மனிதரின் சருமம் 2 ஆயிரத்து 800 சதுர இன்ச்கள் கொண்டவை… எவ்வளவு பெரிய உறுப்பு என இப்போது புரிந்திருக்கும். சருமத்தால் கலவியின் இன்பம் கூடும்.

செக்ஸ் தெரபி

செக்ஸ் தெரபி

ஜம்புலன்களைப் பற்றி நமக்குத் தெரியும். அதில் ஒரு புலன், தொடுதல். இந்தப் புலனால் காம வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். ஐம்புலன்களில் தொடுதல் உணர்வை பல தம்பதியர்கள் பயன்படுத்துவது இல்லை. அதனால்தான், பலருக்கும் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு செக்ஸ் வாழ்க்கையில் இன்பம் கிடைக்காமல் போவதற்கான ஒரு முக்கியக் காரணம்.

தற்போதுள்ள நவீன செக்ஸ் அறிஞர்கள் சொல்வது, தம்பதிகளிடையே சரியான செக்ஸ் வாழ்க்கை இல்லாமல் போவதற்கு வெறும் உடல் மட்டும் காரணமாக இருக்காது. மனமும் அதற்குக் காரணம் என்கிறார்கள்… உடல் மற்றும் மனதை ஒப்பிட்டு பார்த்தால், மன ரீதியான காரணங்கள் பிரதானமாக இருக்கக்கூடும் என்கிறார்கள். இந்த மனம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாத்திரை, மருந்துகள் உண்ண தேவையில்லை. மருந்துகள் பயன் அளிக்காது. செக்ஸ் தெரபி, கவுன்சலிங் போன்றவையே போதுமானது என்கின்றனர் நவீன செக்ஸ் நிபுணர்கள்.

செக்ஸ் தெரபி என்றால்… என்ன மாதிரியாக இருக்கும்? அங்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்படும்? தற்போது பல செக்ஸ் தெரபிஸ்ட்கள் உள்ளனர். இவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்க மாட்டார்கள். ஆலோசனைகளைத் தருபவர்கள். ஒருவரது உடல் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் அவருக்கே எதுவும் புரியாத மனக்குழப்பம் இருக்கலாம். தன்னைதானே சுயமாக ‘அனைலைஸ்’ செய்து கொண்டால் மனக்குழப்பம் இருப்பது தெரியவரும். இந்த மனக்குழப்பத்திலிருந்து மீள்வதற்கு, உடலை இயல்பாக செக்ஸ் உறவுக்குத் தயாராக்கும் முறையைச் சொல்லித் தருவதே செக்ஸ் தெரபி.

Passionate Sex

வெறும் உடலை மட்டும் பரிசோதித்து, உனக்கு எல்லாமே நன்றாகதான் இருக்கு. ‘யூ ஆர் ஆல்ரைட்’ எனச் சொல்பவர்கள். செக்ஸ் தெரபிஸ்ட் கிடையாது. மன ரீதியாகத் தயாராகுவது முக்கியம். அப்படி மனரீதியாகத் தயாராக ஆலோசனை தரும் செக்ஸ் தெரபிஸ்ட்டின் உதவியை நாடலாம். மற்றவர் போல செக்ஸ் என்னால் செய்ய முடியவில்லையே என வருந்துபவர்கள் அதிகம். இப்படி இன்னொரு ஒருவரோடு தன்னை ஒப்பிட்டு மனக்குழப்பத்தில் இருப்பவர்களுக்கு செக்ஸ் தெரபி தேவைப்படலாம். மனதில் உள்ள கவலையை மறக்க, அவரது சிந்தனை ஓட்டத்தை வேறு பக்கமாகத் திருப்பிவிடும் சிகிச்சைதான் இது.

இந்த செக்ஸ் தெரபியை நவீன உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் மாஸ்டர்ஸூம் ஜான்சனும்… இந்தச் சிகிச்சையின் அடிப்படையே தொடுதல்தான்! இதற்கு இவர்கள் பெயரும் வைத்திருக்கிறார்கள். உணர்வுகளின் மீது கவனத்தைப் பதிக்கும் பயிற்சிகள் என்ற பெயரை வைத்துள்ளனர். இதை ஆங்கிலத்தில் Sensate Focus Exercises என்பார்கள். இதைச் சில அறிஞர்கள் மகிழ்ச்சி தரும் உடற்பயிற்சியாககூட மாற்றி யோசித்து ஆராய்ச்சியும் செய்துள்ளனர். இந்தத் தொடுதல் விஷயங்களை எப்படி நவீன அறிஞர்கள் இக்காலத்தில் கண்டுபிடித்து கொண்டாடுகிறார்களோ, அக்காலத்தில் இதெல்லாம் தனி அத்தியாயமாகவே காமசூத்திரத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. அதென்ன தொடுதல் உடற்பயிற்சி?

தொடுதல் உடற்பயிற்சி என்றால் தொடுவதன் மூலம் கிடைக்கும் இன்பத்தை, சுகத்தை அனுபவிப்பதற்காகவே தொட வேண்டும் என்பதுதான் அது. நம் உடலின் பெரிய உறுப்பான, சருமம். எங்கெல்லாம் தொட்டால் பிடிக்கிறதோ அங்குத் தொடுவதே தொடுதல் பயிற்சி. இடுப்பில் தொட்டால் இன்பம் வரலாம். எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு மாறுபாடுகள் இருக்கலாம். பாதத்தில் தொட்டால் பரவசம் வரும். இப்படி உணர்வுகளை உணர வேண்டும் என்பதே இந்தத் தொடுதல் பயிற்சி. ஆனால், பலரும் தொட்டதுமே விறைப்புத்தன்மை வரவேண்டும் என்ற எதிர்பார்த்தல் கூடாது. இதைப் பலரும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். தொடுதல் பயிற்சி காம உறவுக்குப் பெரிதும் உதவுகிறது என்கிறது காமசூத்திரம்

முந்தையப் பகுதியை படிக்க

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?