Health: தம்பதிகள் உடலுறவுக்கு பின் சோகமாக உணர்வது ஏன்? | Nalam 360 twitter
ஹெல்த்

Health: தம்பதிகள் உடலுறவுக்கு பின் சோகமாக உணர்வது ஏன்? | Nalam 360

சில சமயங்களில், உடலுறவுக்கு பிறகு, தம்பதியினர் - இருவருமோ, அல்லது ஒருவரோ, சோகமாக உணர்வார்கள். இதனை மருத்துவ ரீதியாக Postcoital Dysphoria (PCD) என்று அழைக்கின்றனர். இந்த உணர்வு ஏற்பட என்ன காரணம், இதன் விளைவுகள் என்ன? தீர்வு என்ன? இந்த பதிவில் காணலாம்.

Keerthanaa R

தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் அன்னியோனியமாக இருப்பதற்கு, உடலுறவு மிக முக்கிய காரணியாக இருக்கிறது. தினசரி உடலுறவில் ஈடுபடுவதால், நமது உடலுக்கு எந்த மாதிரியான மாற்றங்கள், ஏற்படுகிறது என்பது குறித்து பேசி இருக்கிறோம்.

அதே சமயத்தில் உடலுறவில் உள்ள பிரச்னைகள் குறித்தும் நிறைய விவாதங்களை கடந்திருக்கிறோம்.

அவற்றில் முக்கியமான ஒன்று, உடலுறவுக்கு பிறகு, தம்பதியினர் - இருவருமோ, அல்லது ஒருவரோ, சோகமாக உணருதல்.

இதனை மருத்துவ ரீதியாக Postcoital Dysphoria (PCD) என்று அழைக்கின்றனர். இந்த உணர்வு ஏற்பட என்ன காரணம், இதன் விளைவுகள் என்ன? தீர்வு என்ன? இந்த பதிவில் காணலாம்.

Postcoital Dysphoria என்றால் என்ன?

உடலுறவு முடிந்த பின்னர் ஒரு விவரிக்க முடியாத மன ரீதியான உணர்வு சிலருக்கு தோன்றும். இந்த உணர்ச்சி, சோகம், அதிருப்தி, கோபம் என தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. இதனை அனுபவிப்பவர்களுக்கே இதன் உண்மையான காரணம் பெரும்பாலும் தெரிவதில்லை.

Postcoital Dysphoria ஏற்பட என்ன காரணம்?

இது மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. ஆனால், பெரும்பாலும் இது எதிர்மறையான உணர்வுகளாகவே இருக்கிறது.

சில உணர்ச்சிகள்:

  • அதிகபடியான சோகம்

  • விவரிக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத அழுகை

  • எரிச்சல்

  • கவலை

  • உணர்ச்சியற்ற நிலை

  • குற்ற உணர்வு, அவமானம்

Postcoital Dysphoria உறவுகளை எப்படி பாதிக்கிறது?

இந்த வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்ச்சிகள் உங்கள் உறவை பாதிக்கலாம். நீங்கள் என்ன உணர்வில் இருக்கிறீர்கள், ஏன் என்ற காரணத்திற்கான விளக்கம் தெரியாமல், ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பு ஏற்படும். உறவுகளில் விரிசல் வரத் தொடங்கும்.

ஆகையால், உங்கள் இணையிடம் உங்கள் உணர்வைப் பற்றி வெளிப்படையாக பேசுவது இந்த Postcoital Dysphoriaவை குறைக்க முதல் படி ஆக இருக்கும்

Postcoital Dysphoria ஏற்பட என்ன காரணம்?

  • உங்கள் உறவில் வேறு எதாவது பிரச்னை இருந்தால், இப்படி வெளியாகலாம். நீங்களும், உங்கள் பார்ட்னரும் மனதளவில், என்ன புரிதலுடன் இருக்கிறீர்கள் என்பது முக்கியம்.

  • ஹார்மோன்கள் காரணமாக Postcoital Dysphoria ஏற்படலாம். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உணர்ச்சிகள் மாறுபடும்.

  • ஒரு நபர், ஆணோ பெண்ணோ, இதற்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இருந்தால், முந்தைய traumaவின் காரணத்தால், Postcoital Dysphoria ஏற்படலாம்.

  • இதற்கு முன் அந்த நபர் டிப்ரஷன் போன்ற மன பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு தோன்றாலாம்.

  • ஒருவரை நம்புவதில் பிரச்னைகள் இருந்தால், Postcoital Dysphoria ஏற்படலாம்

  • நமது இணை நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் (உடலுறவில்) என்ற பயமும், அதனால் தோன்றும் அழுத்தம் காரணமாக இருக்கலாம்

  • பாலியல், பாலுணர்வு, உடலுறவு பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருந்தால்

  • இணையுடன் உடலுறவு பற்றிய சரியான பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தால் (communication) இவ்வாறு ஏற்படலாம்.

தீர்வு என்ன?

  • இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கும் இருந்தால், மருத்துவரை அணுகுதல் அவசியம்.

  • குறிப்பாக உங்களுக்கு இருப்பது Postcoital Dysphoria தானா என்பதனை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

  • Postcoital Dysphoria எனில், இதற்கு ஒரு தீர்வு என்று குறிப்பிட்டு எதுவும் இல்லை.

  • மருத்துவர்களின் ஆலோசனை பெறுங்கள். தேவைப்பட்டால் கவுன்சலிங் பெறுங்கள்.

  • மெடிட்டேஷன் செய்யலாம். உங்கள் உணர்வுகளை ஒருமைப்படுத்தி, சரியான திசையில் செலுத்துங்கள்

  • உங்கள் இணையுடன் மனம் வீடு பேசுங்கள், உங்கள் தேவையை வெளிப்படையாக கேளுங்கள்.

  • சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?