இனிப்பு சாப்பிட வேண்டியது உணவுக்கு முன்னரா? பின்னரா? - ஆயுர்வேத மருத்துவம் கூறுவது என்ன? Twitter
ஹெல்த்

இனிப்பு சாப்பிட வேண்டியது உணவுக்கு முன்னரா? பின்னரா? - ஆயுர்வேத மருத்துவம் கூறுவது என்ன?

இனிப்பு நம் உடலுக்கும், மனதுக்கும் ஊக்கமளிக்கும், புத்துணர்வளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். செரிமான என்சைம்கள் மற்றும் எச்சில் சுரக்கவும் உதவும்.

Antony Ajay R

ஆயுர்வேத மருத்துவத்தின் படி சாப்பிடுவதற்கு முன்னர் இனிப்பு சாப்பிடுவது செரிமான அமைப்பைத் தூண்டி, நல்ல செரிமானத்துக்கு உதவும். 

ஆயுர்வேத விதிகளின்படி, இனிப்பு நம் உடலிலும் மனதிலும் உறுதியாக ஊக்கமளிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். செரிமான என்சைம்கள் மற்றும் எச்சில் சுரக்கவும் உதவும். 

இனிப்பான உணவுகளை உட்கொள்ளும் போது இன்சுலின் வெளியேற்றப்படுகிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. 

இனிப்பு பசியைக் குறைக்கும் என்பதனால் நாம் கட்டுப்பாட்டுடன் சாப்பிட முடியும். அதிகமாக சாப்பிட்டு உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளலாம்.

மேலும் ஆயுர்வேத முறையில் சாப்பிடுவதற்கு முன்னர் இனிப்பு எடுத்துக்கொள்வது உடலில் முக்கூற்றத்தை (வாதம், பித்தம், கபம்) சீராக வைத்திருக்க உதவும்.

குறிப்பாக இனிப்பு ‘கப’த்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. கபம் நிலைத்தன்மை மற்றும் ஊட்டச்சத்துடன் தொடர்புடையது. 

கபத்தை தூண்டுவதன் மூலம் வாதம் மற்றும் பித்தத்தை சீராக வைத்து செரிமான பிரச்னைகள் ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கலாம். 

இனிப்பு என்பதால் எல்லா வகையான இனிப்புகளையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆயுர்வேத மருத்துவம் இயற்கையான முழு உணவுகளை மட்டுமே பரிந்துரைக்கிறது.

உதாரணமாக பழங்கள், பேரீச்சம் பழம், தேன் போன்றவை. செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புவகைகளை சேர்த்துக்கொள்வது நிச்சயம் மோசமான ஒன்றாகவே இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?