Tall People Pexels
ஹெல்த்

என்ன உயரமாக இருப்பவர்களை நோய் தாக்குமா? - ஆராய்ச்சிகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்

உயரமாக இருப்பதால் மேலிதயக் குறுநடுக்கம், நரம்புச்சுருட்டல் எனப்படும் இரத்தக்குழாய் சுருங்குதல் ஆகியவற்றுக்கான அபாயம் உள்ளது; அதே சமயம் இதயநோய்கள், அதிக கொலஸ்ட்ரால், இரத்த மிகை அழுத்தம் போன்றவை வருவதற்கு மிகவும் குறைவான வாய்ப்புதான் உள்ளது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

NewsSense Editorial Team

இப்போது பொதுவாக உயரமாக இருப்பதை எல்லோரும் விரும்புகிறார்கள். கொஞ்சம் கூடுதலாக இருக்கும் சில செ.மீ. உயரம், எவ்வளவு பெரிய கூட்டத்திலும் உங்களைத் தனியாகக் காட்டிவிடும் என்பது ஒரு காரணம். அது மட்டுமின்றி கூடுதல் உயரமானது ஒருவித தன்னம்பிக்கையையும் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

இப்படி சாதகமான பல அம்சங்களைப் பட்டியலிட்டாலும், இந்தக் கூடுதலான உயரத்துக்கென ஒரு விலையும் உண்டு.

அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, உயரமான நபர்களுக்கு ஒப்பீட்டளவில் பலவித உடல்நலச் சிக்கல்கள் ஏற்படுகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது.

Tall People

பிஎல்ஓஎஸ் ஜெனிட்டிக்ஸ் எனும் ஆய்விதழில் வெளியான இந்த ஆய்வு முடிவில், உயரமானவர்களுக்கு நரம்புக்கோளாறுகள், நரம்பு தொடர்பான நோய்கள் வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் எவ்வளவு உயரமாக இருக்கிறார், குட்டையா நெட்டையா என்பதும் பல்வேறு நோய்களுக்கான சவால்களை அதிகரிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.

பெரிப்பெரல் நியூரோபதி எனப்படும் நரம்புச்சிக்கலுக்கும் நபரின் உயரத்துக்கும் தொடர்பு உள்ளது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Nervous Disorder

இந்த பாதிப்பில், நரம்புக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி கால் குழிப்புண், பாதப் பகுதி குழிப்புண் போன்ற எலும்பு, தோல் தொற்றுகள் உருவாகவும் வாய்ப்பு உண்டு என்றும் கூறுகிறது, இந்த ஆய்வு முடிவு.

பொதுவாக, முன்னெல்லாம் மனிதர்களின் உயரத்துக்கும் இதய நோய்கள் முதல் புற்று வரை பல்வேறு நோய்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் விஞ்ஞானிகளோ இதை உறுதியாகச் சொல்லமுடியாத நிலையிலிருந்துவருகின்றனர்.

அதாவது ஒருவர் உயரமாகவோ அல்லது குள்ளமாகவோ இருப்பது தான் அவரின் நோய்க்கான காரணமா, அல்லது சரியான ஊட்டம் இல்லாத பின்னணியை உருவாக்கும் சமூகப் பொருளாதார நிலைமையின் தாக்கமாக இருக்காதா எனும் கேள்வி இன்றுவரை தொடர்கிறது.

இந்த ஆராய்ச்சிக்காக 2.5 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் மரபியல், உடல்நலத் தரவுகளை ஆய்வாளர்கள் எடுத்துக்கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோளாறுகள், அவைதொடர்பான பிரச்னைகள் இந்த ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டன.

Heart Damage

உயரத்துக்கும் நோய்க்கும் இடையிலான தொடர்பு பற்றிய மிகப் பெரிய ஆய்வாக இது அமைந்தது.

உயரமாக இருப்பதால் மேலிதயக் குறுநடுக்கம், நரம்புச்சுருட்டல் எனப்படும் இரத்தக்குழாய் சுருங்குதல் ஆகியவற்றுக்கான அபாயம் உள்ளது; அதே சமயம் இதயநோய்கள், அதிக கொலஸ்ட்ரால், இரத்த மிகை அழுத்தம் போன்றவை வருவதற்கு மிகவும் குறைவான வாய்ப்புதான் உள்ளது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

இராக்கி மௌண்டைன் வட்டார விஏ மருத்துவ மையத்தின் ஸ்ரீதரன் இராகவன் இதை அழுத்தமாகக் கூறுகிறார்.

Tall People

மனிதர்களின் உயரத்தைப் பொறுத்தவரை, அது முன்கூட்டியே அறியமுடியாத ஒரு சவாலாக இருக்கிறது; குறிப்பாக, விடலைப் பருவத்தினர் நோய்களில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர், புதிய ஆய்வின் வல்லுநர்கள்.

எனினும், இதை முழுமையாக அறிந்துகொள்ள கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

உலக அளவில் பல நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும், இதைவிடப் பெரிய அளவிலும் விரிவான ஆய்வுகளைச் செய்யும்போது இன்னும் உறுதியான முடிவுகளை அடையமுடியும் என்பது வல்லுநர்களின் நம்பிக்கை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?