வாழை இலையில் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? அடடே தகவல்! twitter
ஹெல்த்

வாழை இலையில் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? அடடே தகவல்!

Keerthanaa R

தென்னிந்திய பாரம்பரியங்களில் முக்கிய பங்கு வாழையிலை சாப்பாடு. முன்பெல்லாம் நம் வீடுகளில் நம் அன்றாட உணவையே வாழை இலையில் தான் சாப்பிட்டார்கள். தற்போது பண்டிகை காலங்களில், விருந்துகளின்போது உணவு பரிமாற வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

தலைவாழை இலை விரித்து வகை வகையான உணவுகளை அதில் வரிசையாக பரிமாறினால், பசியில்லாதவர்களைக் கூட இரண்டு மடங்காக சாப்பிடவைத்துவிடலாம்.

இந்த வாழையிலை உணவு பரிமாற மட்டுமல்ல, சமைக்க, உணவுகள் பேக் செய்ய என பல பரிமாணங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

இது பாரம்பரியம் என்பதையும் கடந்து, மருத்துவ ரீதியாகவும் நம் உடலுக்கு நன்மை பயக்கிறது இந்த வாழையிலை.

வாழையிலையில் உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? இந்த பதிவில் காணலாம்

கிருமி நாசினி

வாழையிலை ஒரு சிறந்த இயற்கை கிருமி நாசினி ஆகும். சூடான உணவை இதில் வைத்து சாப்பிடுவதால், இலையின் நற்குணங்கள் நம் உணவில் கலந்து உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.

வாழை இலை மட்டுமல்ல, வாழை மரங்களும், வாழைத்தண்டு சாறும், வாழைக்கிழங்கு சாறும் நச்சு முறிப்பான்கள் தான்.

இன்றும் நம் வீடுகளில் ஒரு சுப நிகழ்ச்சிகள் தொடங்கி, இடுகாட்டு பாடைவரை வாசல்களில் வாழைமரம் கட்டுவோம். இது எல்லாமே கெட்ட கிருமிகள் நம்மை அண்டாமல் இருக்க தான்

உடல்நல மேம்பாடு

வாழையிலையில் சாப்பிடுவதால் சாப்பிடும் உணவு சீக்கிரத்தில் செரிக்கிறது. இதற்கு காரணம் இலைகளில் உள்ள குளோரோபில். மேலும் வயிற்று புண்களை ஆற்றி, பசியையும் தூண்டவல்லது.

வாழையிலையில் சாப்பிட்டால் தலைமுடி நீண்ட நாட்களுக்கு கருப்பாக இருக்கும், இளநரை தோன்றாது. மந்தம், வலிமை குறைபாடு, இளைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறையும்.

இதிலுள்ள ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் நம் உடலில் உள்ள செல்கள் சிதைவடையாமல், இளமையாக இருக்கவும் உதவுகின்றன.

சருமம் தொடர்பான நோய்கள் அகன்று, சருமம் பளபளக்க உதவுகிறது

உயிராற்றல்

வாழையிலை மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பின்னரும் கூட ஆக்சிஜன் வெளியிடுகிறது. வாழையிலை குளிர்ச்சியை தரும், மேலும் இதிலுள்ள பாலிஃபெனால் நம் செல்களில் உள்ல டிஎன்ஏவை கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கிறது

சுவை

வாழையிலையில் உணவை சாப்பிடும்போது, சமைக்கப்படும்போது அதன் சுவை மேம்படுகிறது. குறிப்பாக சூடான உணவு பதார்த்தங்கள் பரிமாறப்படும்போது, இலையிலுள்ள பாலிஃபெனால் உணவில் கலக்கிறது. இதனால் வைட்டமின் ஏ, கால்சியம், சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் நம் உடலுக்குள் செல்கின்றன

பாதுகாப்பு

உணவின் ருசியைக் கூட்டமட்டுமல்ல, உணவை பாதுகாக்கவும் வாழை இலைகள் உதவுகின்றன. வாழை இலையில் கட்டப்படும் சமைத்த உணவுகள், கீரைகள், பூக்கள், பழங்கள் காய்கறிகள் அவ்வளவு எளிதில் கெடுவதில்லை.

வாழை இலைகள் சுற்றுச் சூழல் பாதுகாவலர்களும் கூட. தெர்மாக்கோல், பிளாஸ்டிக், பேப்பர் பிளேட்டுகள் உடல்நலத்தையும் பாதிக்கும், அதே சமயத்தில் சுற்றுச்சூழலையும் பாதிக்கும்

வாழை இலைகள் இந்த பிரச்சினைகளை தவிர்க்கின்றன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?