இரவில் சாப்பிடவே கூடாதவையும், சாப்பிட வேண்டியையும் - விரிவான தகவல்கள்  Pixels
ஹெல்த்

இரவு உணவு : இரவில் சாப்பிடவே கூடாதவையும், சாப்பிட வேண்டியையும் - விரிவான தகவல்கள்

இயற்கையால் உருவான அனைத்து ஜீவராசிகளும், பகலில் உண்டு உயிர் வாழும் உயிரினங்கள் சூரியன் சாய்ந்ததும் உணவு எடுக்காது. ஆனால், இவை மனிதர்களுக்கு மட்டும் தெரியாமல் இல்லை மறந்து போயிருக்கிறது; அல்லது அலட்சியமாகக் கருதப்பட்டு வருகிறது.

NewsSense Editorial Team

இரவு நேர உணவைப் பெரிய ஃபீஸ்டாக உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. காரணம், இரவு உணவு கலாச்சாரம்… இந்த இரவு உணவு தின்று தீர்க்கும் ஃபுட்டீஸ்களுக்கும் பெருகி வருகின்ற கல்லீரல் மருத்துவமனைகளுக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. ஃபுட்டீஸ்களால் கல்லீரல் மருத்துவமனைக்கு லாபம் அதிகம். குடித்துக் கெடுக்கும் கல்லீரலுக்கு இணையாகத் தின்று கெடுக்கும் கல்லீரல் பாதிப்பும் அதிகம். முன்பு எங்கேயோ ஒன்று என இருந்த கல்லீரல் மருத்துவ நிபுணர் இப்போது அதிகரிப்பதற்கும் ‘இரவு உணவு கலாச்சாரம்’ ஒரு முக்கியக் காரணம். Non-alcoholic fatty liver பிரச்சனைக்கு, இரவு உணவுகள்தான் முதலும் முக்கிய இடமும் பிடித்துள்ளது. லைஃப் ஸ்டைல் நோய்களில் கல்லீரல் பாதிப்பும் இரவு நேர உணவும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. இரவு உணவு கலாச்சாரம் பெருக பெருக கல்லீரல் மருத்துவமனைகளும் பெருகி வருகிறது எனக் கவனிக்கத் தவறுகிறார்கள்.

முன்பு 6-6.30 மணிக்குள் சூரியன் மறைந்ததும், செரிமான சக்தி இருக்காது என மனிதர்களுக்குத் தெரியும். இயற்கையால் உருவான அனைத்து ஜீவராசிகளும், பகலில் உண்டு உயிர் வாழும் உயிரினங்கள் சூரியன் சாய்ந்ததும் உணவு எடுக்காது. ஆனால், இவை மனிதர்களுக்கு மட்டும் தெரியாமல் இல்லை மறந்து போயிருக்கிறது; அல்லது அலட்சியமாகக் கருதப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், பகலில் ராஜா போலவும் மதியம் இளவரசர் போலவும் இரவில் பிச்சைக்காரர் போலவும் சாப்பிட வேண்டும் என வாட்ஸ் அப்பில் அத்தனை மெசேஜ்களும் வரத்தான் செய்கிறது. ஆனால், இரவில் பிரியாணிக்குள்ளேயும் பார்பிக்கியூக்களிலும் ஃபாஸ்ட்புட்களிலும் தெரிந்தே விழுவோர்தான் அதிகம்.

Liver

‘கல்லீரல் பத்திரம்’ எனச் சொல்லும் போது அலட்சியம் படுத்தும் ஒவ்வொருவரும் கல்லீரல் பாதிப்படையும் போதுதான் இதன் அர்த்தம் முழுமையாக புரியும். உடலில் உள்ள பெரிய உள் உறுப்பான கல்லீரல் பெரும்பாலும் அழிவது வாழ்வியல் பழக்கத்தாலும் உணவுப் பழக்கத்தாலுமே…

இரவில் செய்யவே கூடாதவை

பசி எடுப்பதில்லை

இரவு 7 மணிக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 7 மணிக்கு மேல்தான் எனக்குப் பசிக்கிறது எனச் சொல்லும் மக்கள் உண்டு. பசியைக் கவனிக்கத் தெரியும்; புரியும், இரவில் பசி அதிகம் இருக்காது. மிக லேசாகவோ அல்லது பசியே இல்லாமலோ இருக்கலாம். பசியைக் கவனித்து உண்ணுவது முக்கியம்.

மீறி பசி எடுத்தால்…

ஒருவேளை 7 மணிக்கு மேல் 9 மணிக்கு மேல் பசி எடுக்கிறது என்றால் என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது. இரவில் பிரியாணி, அசைவ உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், பரோட்டா போன்ற அனைத்து இரவு உணவு கலாச்சார மெனுக்கள் எல்லாமே உடலுக்கு மிகக் கெடுதி.

மதுவும் உணவும்

குடித்துக் கெட்டுப்போகும் கல்லீரலும் இரவில் ஹெவியான உணவைச் சாப்பிடும் கல்லீரலும் இணையான பாதிப்பைச் சந்திக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

திட உணவு - ஹெவி உணவு

சோலா பூரி, பரோட்டா, நான் - கிரேவி, பிரியாணி, அசைவ உணவுகள் அனைத்தும், மற்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், மைதா உணவுகள் அனைத்தும் இரவு 6 மணிக்கு மேல் சாப்பிடக் கூடாது.

கோல்டன் மில்க் தவிர்

பெரும்பாலானோர் இரவில் பால், மஞ்சள் கலந்த பால், தேன் கலந்த பால் எனக் குடிக்கும் பழக்கம் உண்டு. பால் மிக ஹெவியான உணவு. பால் செரிமானம் ஆக 6-8 மணி நேரம் ஆகலாம். அவரவர் உடலின் உள்ள செரிமானத் தீயை பொறுத்துத்தான். செரிமானத் தொல்லை இருப்பவர்களுக்கு, 8 மணி நேரத்துக்கும் அதிகமாகவும் ஆகலாம். செரிக்காமலும் கெட்டு அழுகலாம். எனவே, பால் குடிப்பதைத் தவிர்க்கவும். பால் என்பது பால் மட்டுமல்ல பால் பொருட்கள் அனைத்தும்தான். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், சீஸ், பன்னீர், மலாய், கிரீம் போன்றவை எல்லாமே. கோல்டன் மில்க், சுக்கு பால், ஆயுர்வேத பால் என எந்தப் பாலும் அருந்தக் கூடாது.

கீரை, தயிர்

கீரை, தயிர்

இரவில் கீரை, தயிர், பால் பொருட்கள் போன்றவை சாப்பிட்டால் செரிமானம் ஆகாமல் உடனடியாக வயிறு கெடும். மந்தமாகும். வயிறு அப்செட்டாகும். எனக்குப் பேதி வரவில்லையே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், செரிமானம் சீராக நடக்காமல் வயிற்றுக்குள் தேங்கி அழுகும். இதனால் அதனைச் சுற்றி வாயு, நீர்க்கழிவுகள், நொதி கழிவுகள், நார் கழிவுகள் எனக் கழிவுகள் உண்டாகிறது.

எண்ணெய்யும் இனிப்பும்

அதிகக் காரம், மசாலா, எண்ணெய் ஊற்றப்பட்ட, எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். கேக், குக்கீஸ், ஐஸ் கிரீம், பிஸ்கட், சாக்லேட், ஸ்வீட்ஸ், வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, தயிர் வடை, தாஹி பூரி, தாஹி சாட் உணவுகள் போன்றவை தவிர்க்கவும்.

குளிர்ச்சி உணவுகள்

இரவில் கூல்டிரிங்க்ஸ், மாக் டெயில்ஸ், மற்ற சிரப் கலந்த செயற்கை பானங்கள் தவிர்க்கவும். சிறுநீரகங்களும் கல்லீரலும் பெரும்பாலும் கெடுவதற்கான ஒரு முக்கியக் காரணம் செயற்கை பானங்கள்.

Drinks

திரவ உணவுகள்

இரவு 6 மணிக்கு அதிகமாகத் தண்ணீரும் குடிக்காதீர்கள். தேவைக்கு ஏற்ப தாகத்துக்கு ஏற்ப தாராளமாகத் தண்ணீர் பருகலாம். ஆனால், தேவையற்ற தாகமே இல்லாமல் சும்மாவே தண்ணீர், ஜூஸ், இளநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். அதுவும் முக்கியமாக இரவில்…

இரவில் செய்ய வேண்டியவை

இரவு 7 மணிக்குள் பசித்தால், லேசான உணவான ஆவியில் வேகவைத்த ஸ்டீம்டு உணவுகள் - இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை சாப்பிடலாம். ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாம். 2 தோசை, ஆப்பம், சப்பாத்தி சாப்பிடலாம்.

காய்கறி சாலட், பழ சாலட், பிடித்த பழங்கள், பழச்சாறுகள் சாப்பிடலாம். ஆனால், இதில் பால், கிரீம் சேர்க்கக் கூடாது.

காய்கறி அவியல், ஒரு அடை எனச் சாப்பிடலாம். ஆனால், 9 மணிக்கு மேல் உண்ணக் கூடாது.

9 மணிக்கு மேல் தீவிர பசி எடுத்தாலும் சமைக்காத உணவான இயற்கையான பழங்களைச் சாப்பிடுவதால் வயிறும் கல்லீரலும் பாதுகாக்கப்படும்.

இரவில் பெரும்பாலும் எடுப்பது பொய் பசி. சிறிது தண்ணீர் குடிக்க அடங்கும். அதன் மீறியும் பசி எடுக்கப் பழங்கள் சாப்பிடுவது சிறந்தது. பழங்களில் இரவில் மலை வாழைப்பழம், ஏலாக்கி பழமும் சாப்பிடலாம்.

இரவு 9 மணிக்கு மேல் 3 லேசான இட்லி சாப்பிட்டாலும் 3 பெக் மது அருந்துவதற்குச் சமம் என இயற்கை மருத்துவர்கள் சொல்கின்றனர். இட்லியே செரிமானமாகச் சிரமம் என்ற மற்ற பிரியாணி, ஃபிரைட் ரைஸ் சாப்பிடுவதை நினைத்துப் பாருங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?