Blue Tea Canva
ஹெல்த்

Blue Tea - க்ரீன் டீ தெரியும், அதென்ன ப்ளூ டீ? உடலுக்கு நல்லதா?

தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இந்த தேநீர் பிரபலமாக உள்ளது. அங்கு இரவு உணவிற்குப் பிறகு இது பரிமாறப்படுகிறது.

Priyadharshini R

பல வகையான டீ வகைகள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்த வகைகளில் தற்போது வழக்கத்தில் இருக்கும் ‘க்ரீன் டீ’ குறித்து தெரியும், ஆனால் ‘ப்ளூ டீ’ குறித்து தெரியுமா?

அதென்ன ப்ளூ டீ? என்று கேள்வி கேட்பவர்களுக்கான பதிவு தான் இது.

ப்ளூ டீ

ப்ளூ டீ நீண்ட காலமாக சந்தையில் உள்ளது. பயண வலைப்பதிவுகளால் இவை மீண்டும் பிரபலமடைந்துள்ளது.

நீல தேயிலை இலைகள் இப்போது கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் நுகர்வுக்கு எளிதாகவும் பரவலாகவும் கிடைக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள தேயிலை ஆர்வலர்களால் அவற்றின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பயன்பாடுகளுக்காக அவை வழக்கமாக வாங்கப்படுகின்றன.

ப்ளூ டீ முன்பு ஓலாங் அல்லது பிளாக் டிராகன் டீயாக சந்தையில் கிடைத்தது. ஆனால் அது சமீபத்தில் தான் பிரபலமடைந்தது.

தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இந்த தேநீர் பிரபலமாக உள்ளது. அங்கு இரவு உணவிற்குப் பிறகு இது பரிமாறப்படுகிறது.

எப்படி பருகலாம்

கொதிக்க வைத்த தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விட வேண்டும். அதில் எழுமிச்சை சாறு சில சொட்டுக்கள் விட்டு, தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ செய்து பருகலாம்.

பயன்கள்

தேநீர் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்

மன அழுத்தத்தை குறைக்கும்

இது மூளைக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும், நாள் முழுவதும் உங்களை உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

ப்ளூ டீ இயற்கையான டையூரிடிக் பானமாக இருப்பதால் எடையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ப்ளூ டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் ஒரு பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது,

ப்ளு டீயில் ‘ஆன்டி-க்ளைகேஷன்’ இருப்பதால் வயது முதிர்வை தடுக்கிறது. இதனால் நம் இளமையை பாதுகாத்து கொள்ள முடியும்.

கர்ப்பிணிகள், நோயாளிகள் கட்டாயம் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி இதனை எடுத்து கொள்ளக் கூடாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?