நம் உடலில் அதிக அளவில் இருக்கும் ஒரு பொருள் தண்ணீர் தான். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனுக்கு அடுத்தபடியாக உணவை விட முக்கியமானது தண்ணீர்.
நம் உடலமைப்புக்கு ஏற்ற எந்த ரிஸ்கும் இல்லாத ஒரு பானம் தூய்மையான தண்ணீர் தான். மிகவும் ஆரோக்கியமான பானமும் கூட.
நம் உடல் 50-70% நீரால் ஆனது என நமக்குத் தெரியும். நீரில்லாமல் நம்மால் வாழ முடியாது என்பதும் நமக்குத் தெரியும். தெரிந்தாலும் தண்ணீர் குடிப்பதில் மக்களுக்கு என்ன தான் பிரச்னை?
சாதாரணமாக தண்ணீர் குடிப்பது இப்போதெல்லாம் சாதனையாக பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் தண்ணீர் இன்ஃப்ளூயன்சர்களே பலர் உருவாகிவிட்டனர்.
யூடியூபர் ஜே.கே கூட தன் எல்லா வீடியோக்களிலும் தண்ணீர் குடிப்பதை நமக்கு நினைவுபடுத்த வேண்டியதாக இருக்கிறது. தண்ணீர் குடிப்பது சருமத்தை பளபளப்பாக ஆக்கும் என்ற நம்பிக்கை தான் பலரும் சில டம்ளர்களாவது குடிக்க காரணமாக இருக்கிறது.
நம் உடலுக்கு தேவையான நீரை நாம் காட்டு விலங்குகளைப் போல அச்சத்துடன் பல மைல் நடந்து சென்று குடிக்கப்போவது இல்லை. வீட்டில் இருக்கும் நீரை எடுத்து குடிக்க கூட சம்மர் வாட்டர் சேலஞ் தேவைப்படுகிறது.
சராசரியாக நாம் ஒரு லிட்டர் தண்ணீர் கூட குடிப்பதில்லை என்பது மோசமான உண்மை.
ஒரு நபருக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்.
தண்ணீர் குடிப்பதில் தான் நமக்கு பிரச்னை. ஆனால் காபி, டீ ஆகட்டும், ஜூஸாகட்டும் இஷ்ட்டப்பட்டு அருந்திக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த திரவங்களிலும் நீர் தானே இருக்கிறது? நாம் ஏன் தண்னீருக்கு மாற்றாக இவற்றைப் பருக கூடாது?
2016ம் ஆண்டு இது குறித்து ஒரு ஆய்வு நடந்திருக்கிறது. ஸ்டிர்லிங் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய அந்த ஆய்வில், பலதரப்பட்ட பானங்காளை மாணவர்களுக்கு கொடுத்து 4 மணி நேரத்துக்கு பிறகு அவர்கள் உடலில் நீர் (ஹைட்ரேஷன்) எவ்வளவு இருக்கிறது என சோதித்தனர்.
தண்ணீரைப் போலவே காபி, பீர் குடித்தால் கூட ஹைட்ரேஷன் சரியாக இருந்திருக்கிறது. பால் குடித்தவர்கள் இன்னும் அதிக ஹைட்ரேட்டடாக உணர்ந்தனர்.
ஹைட்ரேஷன் கிடைத்தாலும் தண்ணீருக்கு மாற்றாக பிற பானங்களை பருகுவது சரியான செயல் அல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காபி, டீ எல்லாம் அதிகமாக சிறுநீர் வர வைக்கும் இதனால் நாம் அடிக்கடி கழிவறைக்கு செல்ல நேரிடும். அத்துடன் அதிக நீரையும் இழப்போம்.
குளிர் பானங்கள் மற்றும் ஜூஸ் கூட நம்மை ஹைட்ரேட்டடாக வைத்திருக்கும். ஆனால் அவற்றில் அதிகப்படியான இனிப்பு இருக்கும். காபி, டீ-யை விட இவை சிறந்தவை என்றாலும் நீருக்கு மாற்றாக இனிப்பான பானங்களை பருகினால் இரத்த சர்கரை அளவு தாறுமாறாக அதிகரித்து நீரிழப்பை (டி-ஹைட்ரேஷன்) விட பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.
எனவே நாம் எப்போதும் ஹைட்ரேட்டடாக இருக்கவும் ஆரோக்கியமாக வாழவும் தண்ணீரைப் பருகுவது தான் சிறந்த வழி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust