Nails  Canva
ஹெல்த்

Nail myths : நக பாலிஷை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிக நாட்கள் பயன்படுத்தலாமா?

நகத்தை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் அழகு சார்ந்த பொருட்கள் பற்றிய பல கட்டுக்கதைகளை நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம் அவற்றைக் குறித்து என இங்குக் காணலாம்.

Priyadharshini R

பெண்கள் தலை முதல் கால் வரை தங்களை அழகுபடுத்திக் கொள்ள பல்வேறு அழகு சாதனங்கள் பயன்படுத்துவார்கள், உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவார்கள்.

சிலருக்கு நகம் வளர்ப்பதும், அதனைப் பராமரிப்பதும், அழகு படுத்துவதும் பிடிக்கும். இதற்காக மாதம் ஒரு தொகையைச் செலவிடுவார்கள்.

நகத்தை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் அழகு சார்ந்த பொருட்கள் பற்றிய பல கட்டுக்கதைகளை நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம் அவற்றைக் குறித்து என இங்குக் காணலாம்.

உணவில் புரதம் சேர்ப்பதால் நகங்கள் வலுபெறுமா?

உங்கள் உணவில் ஜெலட்டின் சேர்ப்பதன் மூலம் நகங்கள் வலுவடையும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

ஜெலட்டின் என்பது ஒரு புரதம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ஜெலட்டின் நகங்களை வலுப்படுத்தும் என்பது எந்த அறிவியல் ஆராய்ச்சியிலும் நிரூபணம் ஆகவில்லை. தினசரி உணவில் நல்ல ஊட்டச்சத்துக்களைச் சேர்த்துக் கொண்டால் நகங்கள் நன்றாக வளரும்.

அடிக்கடி நெயில் பாலிஷ் போடுவதால் நகங்கள் பாதிக்கப்படுமா..?

அடிக்கடி நகங்களுக்கு பாலிஷ் போடுவதால் நகங்கள் பாதிக்கப்படும் என்றும் அதற்கு சிறிய இடைவேளை தேவைப்படும் என்றும் பரவலாக கருதப்படுகிறது. ஆனால் அது உண்மை இல்லை, வெறும் கட்டுக்கதையே! பாலிஷை முறையாக பயன்படுத்தினால் நகங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆர்கானிக் நெயில் பாலிஷ் உள்ளதா.?

நகங்களுக்குப் பயன்படுத்தப்படும் பாலீஷ்களில் வேதிப்பொருள் இல்லாது, அதாவது கெமிக்கல் இல்லாத நெயில் பாலிஷ் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஆர்கானிக்கான பாலிஷ் தீட்டுவதன் மூலம் நகங்களைப் பாதுகாக்கலாம் என்பது கட்டுக்கதையே.

நகங்களை பளபளப்பாக்கப் பயன்படும் பாலீஷ்

சிலர் நெயில் பாலிஷிற்கு மேலே பளபளப்பாக காட்டுவதற்காக சில சாதனங்களைப் பயன்படுத்துவர். அது அதிகம் பயன்படுத்தினால் நகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் சரியான, தரமான பொருட்களைப் பயன்படுத்தினால் அவ்வாறு பாதிப்பு ஏற்படாது.

பிரிட்ஜுக்குள் நெயில் பாலிஷ் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்குமா?

நெயில் பாலிஷை பிரிட்ஜுக்குள் வைப்பதால் அதிக நாட்கள் வரும் என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் நெயில் பாலிஷில் உள்ள அந்த திரவம் காற்றில் ஆவி ஆகினால் அதன் தன்மையை இழந்து டிரை ஆகிவிடும். அதனால் சரியாகத் திறந்து, மூடி அதனைப் பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு வரும்.

தண்ணீருக்குள் கையை விட்டால் சீக்கிரம் காயுமா..?

நம்மில் சிலர் நெயில் பாலிஷ் போட்ட பின் சீக்கிரமாகக் காய்வதற்காகத் தண்ணீருக்குள் கைவிடுவோம். அப்படி வைத்தால் அவை விரைவில் காய்ந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்..ஆனால் நெயில் பாலிஷில் உள்ள அந்த திரவம் காற்றில் விட்டாலே காய்ந்து விடும்.

சதையை எடுத்தல் நகம் வளருமா..?

நம்மில் சிலருக்கு நெயில் பாலிஷ் போடும்போது பக்கத்தில் சிறு சதை எடுத்துக் கொண்டு வரும்.. அந்த சதையை எடுப்பதன் மூலம் நகம் அழகாகும் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அது dead cell ஆக இருந்தால் பாதிப்பு இல்லை. Living cell ஆக இருந்தால் பாதிப்பு ஏற்படும்.

நகங்களைப் பராமரிக்கும் போது!

நகங்களைப் பராமரிக்கும் போது (Nail Art ) நீங்கள் பயன்படுத்தும் பொருட்களை சலூனுக்கு கொண்டுசெல்ல வேண்டுமா? மற்றவர்களுக்கு பயன்படுத்திய சாதனத்தை பயன்படுத்தினால் எதாவது பாதிப்பு ஏற்படுமா?

உண்மையில், ஒருவருக்குப் பயன்படுத்திய சாதனங்களைச் சரியான முறையில் சுத்தம் செய்துவிட்டு அதனை நமக்குப் பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?