கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா? LP
ஹெல்த்

கோவிட் 19: இந்தியாவில் நான்காவது அலை வருமா? - விரிவான கட்டுரை

இந்தியா இதுவரை 1.8 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. 80% பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 94% பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர். எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பெரும்பாலான மக்களின் வாழ்க்கை மற்றும் வணிகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

Govind

உலகம் முழுவதும் கோவிட் அலை மீண்டும் எழுந்துள்ளது. இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் நோய்த்தொற்று அதிகரித்திருக்கிறது. சீனா, ஹாங்காங் இரண்டிலும் கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் தொற்று அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகாரப்பூர்வமாக நான்கு கோடி கோவிட் தொற்றுகளோடு உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. இதில் 5 இலட்சத்திற்கும் மேல் மக்கள் இறந்துள்ளனர். உண்மையான கணக்கு மிக அதிகம் இருக்கலாம். இது உலகில மூன்றாவது பெரிய எண்ணிக்கை. இந்நிலையில் நான்காவது அலை வருமா? அதற்கு நாடு தயாராக வேண்டுமா?

இந்தியாவில் கோவிட் 19 தொற்று தற்போது எப்படி இருக்கிறது?

நல்ல செய்தி என்னவென்றால் தினசரி புதிய தொற்றுகள் கடந்த 2 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளன. கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் இது 50-க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் சில உலகின் சில பகுதிகளில் புதிய அலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவில் குறைந்துள்ளது.

மார்ச் 21 அன்று இந்தியாவில் 1,410 தொற்றுகளே பதிவாகியுள்ளன. இதுவே ஜனவரி 21 அன்று 3,47,00 தொற்றுக்களாக இருந்தன. தற்போது புதிய தொற்றுகள் குறைந்துள்ளதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் குறைந்துள்ளது.

இந்தியா இதுவரை 1.8 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. 80% பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 94% பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர். எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பெரும்பாலான மக்களின் வாழ்க்கை மற்றும் வணிகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

புதிய அலை பற்றி இந்தியா கவலைப்பட வேண்டுமா?

இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பப் கல்லூரியான ஐஐடி விஞ்ஞானிகளின் சர்ச்சைக்குரிய மாடலிங் ஆய்வு, நான்காவது அலை ஜூன் மாதத்தில் தொடங்கி ஆகஸ்டில் உச்சத்தை எட்டும் என்று கணித்துள்ளது.

ஆனால் பல தொற்றுநோயியல் நிபுணர்கள் ஐஐடி ஆய்வில் ஆழ்ந்த சந்தேகம் கொண்டுள்ளனர். அவர்கள் கூறும் ஒரு காரணம் என்னவென்றால், பெரும்பாலான இந்தியர்கள் நோய்த்தொற்றின் மூலம் அல்லது தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் தலைசிறந்த நுண்ணியிரியில் மருத்துவரான டாக்ர் ககன்தீப் காங் கூறும் போது, நாம் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். தடுப்பூசி அதிகம் போட்டிருக்கிறோம். மேலும் பல கொரோனா அலைகளில் பலருக்கும் நோய் வந்து போயிருக்கிறது என்கிறார்.

இரண்டாவதாக, BA.2 எனப்படும் ஒமிக்ரானின் எளிதில் பரவும் துணை மாறுபாட்டால் ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் தொற்றுகளின் அதிகரிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் இந்த துணை மாறுபாடு பரவி தற்போது முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் பெரிய அளவிலான நோய்த்தொற்று அலை ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவு என்கிறார் சந்திரகாந்த் லாஹிரியா எனும் தொற்றுநோயியல் நிபுணர்.

ஆனால் காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தி குறையுமா?

காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தி குறையுமென்றாலும் சில ஆய்வுகளின்படி மூன்று டோஸ் தடுப்பூசிகள் மக்கள் தீவிர நோய்வாய்ப்படுவதையும், மரணமடைவதையம் நீண்ட காலத்திற்கு தடுக்கிறது.

பூஸ்டர் டோஸ் உடலின் ஆண்டிபாடி செயல்பாட்டை அதிகரித்து வைரஸை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. இந்தியாவில் இதுவரை 20 மில்லியன் தடுப்பூசி டோஸ் பூஸ்டர் போடப்பட்டுள்ளது. தற்போது சுகாதர் துறை மற்றும் முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கும் மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு தகுதியானவர்கள்.

ஆனால் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை நீட்டிக்கும் கொள்கையை இந்தியா இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கு காரணம் போதுமான பூஸ்டர் தடுப்பூசி இல்லை என்பதல்ல.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பளரான சீரம் இன்ஸ்டிடியூட், 200 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு கையிருப்பில் இருப்பதாக கூறுகிறது. இதுதான் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஆகும். எனவே மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போடப்படும் என்றால் அதில் கோவிஷீல்ட் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால் இதில் ஒரு பிரச்சினை உள்ளது. வைராலஜிஸ்ட்டான ஷாஹித் ஜமீல் கூறும் போது இந்தியா, பூஸ்டர் டோஸ்களுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புறக்கணிக்கிறது என்கிறார்.

ஃபைசர் அல்லது மடோர்னா மற்றும் புரதம் அடிப்படையிலான நோவாக்ஸ் போன்ற தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ வகையைச் சேர்ந்தவை. அவை மரபணுக் குறியீட்டைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இவைதான் பூஸ்டர் டோஸாக நன்கு வேலை செய்யும் என்கிறார் ஷாஹித் ஜமீல்.

ஆனால் இந்தியாவில் இத்தகைய எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் கிடைப்பதில்லை. இருப்பினும் சீரம் இன்ஸ்டிடியூட் நோவாக்சின் உள்ளூர் பதிப்பான கோவாக்சை உற்பத்தி செய்து இதுவரை 40 மில்லியன் டோஸ்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.

அதை ஏன் இந்தியா இன்னும் பூஸ்டர் டோசாக அங்கீகரிக்கவில்லை? இந்தியர்களுக்கு இந்த சிறந்த மாற்று கிடைக்கக் கூடாதா? என்று கேட்கிறார் டாக்டர் ஜமீல்.

வெவ்வேறு வயதினரிடையே தடுப்பூசி பாதுகாப்பு குறையும் போது துல்லியமான தரவுகளின் அடிப்படையில் பூஸ்டர் டோஸ் போடும் இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். அமெரிக்காவில் அப்படியான தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன.

இந்தியா 9 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் 5 உள்நாட்டில் தயாரிக்கப்படுபவை. அதிலும் 2 மட்டுமே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

மக்கள் முன்பு பெற்ற அதே தடுப்பூசியை பூஸ்டராக கொடுப்பதற்கு பதில், எந்த தடுப்பூசிகள் சிறப்பான பூஸ்டராக செயல்படும், அதை வழங்குவதற்கு சரியான நேரம் எது என்பதை இந்தியா ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்று டாக்டர் காங் கூறுகிறார்.

புதிய கோவிட் 19 மாறுபாடு எப்போது வெளிவரும் என்பதை கணிப்பது கடினம். ஆனால் அதிகபட்சம் 3 முதல் 9 மாதத்திற்குள் அது வரலாம்
கமீல்

இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பியதை பாதிக்குமா?

ஆம் என்கிறார்கள் தொற்றுநோயியல் நிபுணர்கள். ஆனால் அதற்கு சில காரணங்கள் உள்ளன.

அந்த புதிய கொரோனா தொற்று புதிய குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும். இது முன்னர் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் புதிய நோய்த்தொற்றை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்று டாக்டர் காங் கூறுகிறார்.

இது ஒரு வைரஸின் அதிக பட்ச பாதிப்பாகும். இதில் நாம் எச்சரிக்கையற்று இருக்க முடியாது. வைரஸ் தொடர்ந்து பரவி நகலெடுக்கும் போது அது பல்வேறு மரபணு மாற்றங்கள் பெறும் வாய்ப்பு உள்ளது. அதன் போக்கில் தொற்று கடுமையான நோயை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.

லூசியானாவைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் டாக்டர் ஜெர்மி கமில், இந்தியாவும் உலகமும் புதிய கொரோனா மாறுபாடுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஒமிக்ரானை கண்டுபிடித்த தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் முன்னெச்சரிக்கை செய்ததால் உலகம் பயனடைந்தது. இதே போன்று எப்போதும் நாம் அதிர்ஷ்டசாலியாக இருப்போம் என்று தான் நம்பவில்லை என்கிறார் டாக்டர் கமீல். ஒரு புதிய மரபணு மாற்றமடைந்த கோவிட் 19 ஐ காண்பது தவிர்க்க முடியாது என்கிறார் அவர்.

அந்த புதிய கோவிட் 19 மாறுபாடு எப்போது வெளிவரும் என்பதை கணிப்பது கடினம். ஆனால் அதிகபட்சம் 3 முதல் 9 மாதத்திற்குள் அது வரலாம் என்பது ஒரு நியாயமான யூகம் என்று கூறுகிறார் கமீல்.

இந்தியாவில் கோவிட் பாதிப்பின் எதிர்காலம் என்ன?

மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் நோய்த்தொற்றிற்கு எதிராக பெரும்பாலான மக்கள் நல்ல பாதுகாப்பை பெற்றால் மட்டுமே வைரஸுடன் வாழ்வது சாத்தியமாகும். இது ஏற்கனவே இந்தியர்களுக்கு இருப்பதாக தெரிகிறது.

எனவே புதிய மரபணு மாற்றம் கொண்ட கொரோனா வந்தாலும் அது உள்ளூர் அளவில் அதிகரிக்கும், நாடு தழுவியதாக பெரிய அளவில் பரவாது என்கிறார் டாக்டர் கமில்.

வயதானவர்களும் எளிதில் பாதிப்படைபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். அதே போல இதய மற்றும் நீரிழிவு நோய் கொண்ட இளைஞர்களை இந்தியா அதிகம் கொண்டிருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும்.

அதே போன்று கோவிட் 19 இன் மாதிரிகளை நாடெங்கும் பரிசோதனை மூலம் வரிசைப்படுத்த வேண்டும். அப்போதுதான் உருத்திரிந்த மரபணு மாற்றங்களை கண்டுபிடிப்பதோடு அதன் பாதிப்புகளையும் அறிய முடியும். இந்தியா அப்படி வரிசைப்படுத்துவதில்லை என்பது பிரச்சினைக்குரியது.

கோவிட் பொது வெளியில் பரவுவதை விட வீடு, அலுவலகம் போன்ற உள் அரங்குகளிலேயே அதிகம் பரவுகிறது. அதிக மக்கள் தொகை, நெருக்கமான கூட்டம், காற்றோட்டமில்லாத பணியிடங்கள் காரணமாக கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வது போன்றவை தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிறார் டாக்டர் ரெட்டி. கொரோனாவை நாம் சமாளிக்க முடியுமென்றாலும் புதிய அலை வரும் போது நாம் அசைவற்று உறைந்து போகக் கூடாது. முன்னெச்செரிக்கையுடன் செயல்படவேண்டும்.

இறுதியாக கொரானாவின் புதிய அலை வரும். அதை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஓரளவிற்கு இந்தியர்களுக்கு இருந்தாலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் மற்றுமொரு அழிவுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?