Biryani Pexels
ஹெல்த்

Biryani : பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு வருமா?

வெவ்வேறு மசாலாக்களில், பல வகையான சுவைகளில் செய்யப்படும் பிரியாணிகளுக்குப் இந்தியர்கள் அடிமை. ஆனால் ஃபுல் கட்டுகட்டும் பிரியாணி எந்த அளவு ஆரோக்கியமானது என என்றாவது சிந்தித்திருக்கிறோமா?

Priyadharshini R

ஈரானிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் பிரியாணி தற்போது இந்தியாவில் அனைவருக்கும் பிரியமான உணவாக மாறியுள்ளது. பிரியாணி என்று சொன்னதும் பலருக்கும் நாவில் எச்சில் ஊறும், சிலர் அதனை உடனே சாப்பிட்டாக வேண்டும் என்று கங்ஜனம் கட்டுவார்கள். வெவ்வேறு கை பக்குவத்தில், பல வகையான சுவைகளில் செய்யப்படும் பிரியாணிகளுக்குப் இந்தியர்கள் அடிமை. ஆனால் ஃபுல் கட்டுகட்டும் பிரியாணி எந்த அளவு ஆரோக்கியமானது என என்றாவது சிந்தித்திருக்கிறோமா?

பிரியாணி

பிரியாணி வகைகள்

மந்தி பிரியாணி

மண்பானை பிரியாணி

மூங்கில் பிரியாணி

இளநீர் கூடு பிரியாணி

ஹைதராபாத் பிரியாணி

ஆம்பூர் பிரியாணி

தலப்பா கட்டி பிரியாணி

மலபார் பிரியாணி

ஒவ்வொரு வகையான பிரியாணியும் அதன் சுவையாலும், செய்முறையாலும் தனித்துவம் பெறுகிறது.

பிரியாணி

ஹோட்டல் டூ வீடு

முன்பெல்லாம் பிரியாணி என்றால் கடைகளுக்குச் சென்று சாப்பிடும் அபூர்வ உணவாகப் பார்க்கப்பட்டது, தற்போது நகரங்கள் கடந்து கிராமங்களிலும் மண் வாசனையுடன் அனைவரும் வீட்டிலும் மணக்கிறது இந்த பிரியாணியின் சுவை.

அதிலும் விழாக் காலங்களில் பிரியாணி சமைக்கும் காலம் மலையேறிப் போய், வாரத்திற்கு ஒரு முறை பிரியாணி செய்யும் வழக்கம் வந்துவிட்டது. இன்னும் சொல்ல போனால் தினமும் பிரியாணி சாப்பிடும் பழக்கம் நம்மில் சிலருக்கு இருக்கிறது.

அதிகம் பிரியாணி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமா?

பிரியாணி அதிகம் சாப்பிட்டால், ஆண்மைக் குறைவு ஏற்படும் என்ற தகவல் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. ஆனால் நமது உடலுக்கு ஒரு நாளைக்கு 1500 - 1800 கலோரி தேவைப்படும். ஆனால், பிரியாணி சாப்பிடும் போது 900 கலோரி கிடைக்கும். பிரியாணி செரிமானத்திற்காக அருந்தும் பானங்கள் உள்ளிட்டவற்றால் கூடுதல் கலோரிகள் கிடைக்கும். இவைதான் பிரச்னையாக மாறுவதாகக் கூறுகின்றனர்.

Biryani

உயிரணு குறையக் காரணம்

இன்றைய துரித உணவுப் பழக்கம், சரிவிகித உணவின்மை, காய்கறி, பழங்களைத் தவிர்ப்பது, உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களினால் உடல் பருமன் அதிகரித்து, உயிரணுக்கள் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வாரத்திற்கு 3 / 4 முறை பிரியாணி சாப்பிடுவதால் தேவைக்கு மேல் அதிகரிக்கும் கலோரி கிடைத்து உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமன் காரணமாக உயிரணுக்கள் குறைவு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்

பிரியாணி சாப்பிடுவதால் ஆண்மைக்குறைவு ?

பிரியாணி சாப்பிடுவதால் ஆண்மைக்குறைவு, உயிரணுக்கள் குறைவு ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வ தரவுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் மற்ற உணவுப் பொருட்களில் உள்ளவைதான் பிரியாணியிலும் உள்ளது. இதனால் உயிரணு குறைவதற்கான வாய்ப்பும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதே சமயத்தில் உடல் எடை அதிகரிப்பால் உயிரணுக்கள் குறைவு ஏற்படுகிறது. இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றும் உடல்பருமனால் பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியுமே தவிர பிரியாணி சாப்பிட்டால் உயிரணுக்கள் குறையும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்கின்றார்கள் மருத்துவர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?