Weight Loss Twitter
ஹெல்த்

சுய இன்பம் செய்தால் எடை குறையுமா?

Antony Ajay R

சுய இன்பம் செய்யும் பழக்கத்தைச் சுற்றி வளரும் கட்டுக்கதைகள் முடிவதேயில்லை. பல கட்டுக்கதைகளுக்கு மத்தியிலேயே அது குறித்தன ஒன்றிரண்டு உண்மைகளைக் காண முடியும். சுய இன்பம் செய்வதனால் எடைக்குறையும் என்பது கட்டுக் கதையா உண்மையா? என்கிற குழப்பம் நம் அனைவருக்கும் இருக்கும் அல்லது இருந்திருக்கும்.

சுய இன்பமும் எடைக்குறைப்பும்

சுய இன்பம் செய்வது மிகவும் இயல்பானது மற்றும் தீங்கு விளைவிக்காதது என புரிந்துகொள்ளவே சமூகம் தயாராக இல்லை. இந்த நிலையில் சுய இன்பத்தைப் பேசக்கூடாத, தீண்டதகாத தலைப்பாக விட்டு விடுவது நல்லதல்ல. சுய இன்பத்தைப் பேசுவதன் மூலமாகவே அதனைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளை உடைக்க முடியும். அப்படி உடைக்க வேண்டிய கட்டுக்கதைதான் எடை குறைப்பு விவகாரமும்.

சுய இன்பம்

இன்னும் சில நம்பிக்கைகள்

சுய இன்பம் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியாது. சுய இன்பம் உடலின் எந்தப்பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தாத போது எப்படி எடை குறையும்?. எனினும் பரவலாக சுய இன்பம் எடைக்குப்பின் அங்கமாக நம்பப்படுவது வேடிக்கைதான். அது மட்டுமல்ல சுய இன்பத்தினால் முடியுதிர்வு, மலட்டுத்தன்மை, பார்வையிழப்பு, மன நோய்கள் வரை ஏற்படும் என்றும் பலர் குருட்டுத்தனமாக நம்புகின்றனர். இதில் எதுவுமே உண்மையில்லை.

சுய இன்பத்தினால் எடை குறைந்தது!

இப்படி சிலர் சொல்லக்கூடும். ஒரு உண்மையாகவே “சுய இன்பத்தினால் எடைகுறைந்ததாக கூறினால்”, ஒன்று அவர் வதந்தி பரப்புபவராக இருக்க வேண்டும். அல்லது அவரது உடலில் வேறு பிரச்சனைகள் இருக்க வேண்டும். சுய இன்பம் செய்வதனால் கொஞ்சம் சோம்பலாக உணரலாம். அதுவும் ஒரு நாளுக்கு ஒன்றிரண்டு முறைகளுக்கு மேல் செய்பவர்கள் மட்டும்.

எனில், சுய இன்பம் நல்ல பழக்கம் தானா?

நிச்சயமாக சுய இன்பம் கெட்ட பழக்கம் இல்லை. அதனால் சில நல்ல விளைவுகள் தான் ஏற்படுகின்றன. சுய இன்பத்தினால் மனதும் உடலும் இளைப்பாறுதல் அடைகிறது. மன உளைச்சலிலிருந்து விடுதலை அளிக்கிறது. உச்சத்தை அடையும் போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் வெளியாவதனால் உங்களைக் குறித்து நீங்களே மகிழ்ச்சியாக உணர உதவுகிறது.

எப்போது மருத்துவரைச் சந்திக்கும் நிலை ஏற்படும்

நீங்கள் சுய இன்பம் செய்யும் போது அதிக சோர்வாக உணர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஒரு வேளை சுய இன்பம் செய்ததால் திடீரென உடல் எடைக் குறைந்தால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?