குளிர் காலம் மனதுக்கு இதமானது. ஒருவித நிசப்தமும் குறுகுறுப்பும் நிறைந்திருக்கும். குறிப்பாக குளிர்கால அதிகாலைகள் நம்மை தியானத்தில் இருப்பதுபோல உணர வைக்கும்.
ஆனால் குளிர்காலம் வாந்தாலே சிலருக்கு பேயை கண்டதுபோல பயம் தொற்றிக்கொள்ளும். சளி, காய்ச்சலில் சுருண்டு கிடந்தே மாதங்கள் கடந்துவிடும்.
இந்த நேரத்தில் கிடைக்கும் காய்கறிகளை எல்லாம் சாப்பிடுவது நன்றுதான். அத்துடன் முட்டையும் சேர்த்துக்கொண்டால் குளிர்கால டயட் சிறப்பானதாக இருக்கும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
முட்டை புரதச்சத்து மிக்க உணவு என்பது நமக்குத் தெரியும். ஒரு முட்டையில் 7 கிராம் புரதமும் 5 கிராம் நல்ல கொழுப்பும் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்த்கியை வளர்க்க உதவும்.
இது மட்டுமல்லாமல், இரும்புச் சத்து, கரோட்டினாய்டுகள், வைட்டமின் ஏ, ஃபோலேட், வைட்டமின் பி5, வைட்டமின் பி12, பாஸ்பரஸ், செலினியம், வைட்டமின்கள் டி, ஈ, கே, பி6, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துகள் உள்ளன.
சரி குளிர்காலத்தில் முட்டை எப்படி பயன்படும் எனப் பார்க்கலாம்.
குளிர் காலத்தில் முட்டை சாப்பிடுவது நம் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும். முட்டையில் இருக்கும் நல்ல கொழுப்பு செல் வளர்ச்சிக்கு உதவும், நமது உள்ளுறுப்புகளை பாதுகாக்கும்.
குளிர்காலத்தில் சாதாரணமாக தொற்றிக்கொள்ளும் சளி, காய்ச்சலுடன் போராட முட்டையில் இருக்கும் துத்தநாகம் உதவும்.
வைட்டமின் டி பொதுவாக சூரிய வெளிச்சத்தில் இருந்து பெறப்படக் கூடியது. குளிர் காலத்தில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
முட்டையில் இருந்து நம்மால் வைட்டமின் டி பெற முடியும். வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய்த் தொற்றில் இருந்து தப்பி மகிழ்ச்சியான குளிர்காலத்தை அனுபவிக்க முட்டை இவ்வாறு நமக்கு உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டையில் இருக்கும் பி6 மற்றும் பி12 உயிர்சத்துகளும் உதவும்.
பருவ காலம் பார்க்காமல் நமக்கு வருடத்தின் எல்லா நாளும் கிடைக்கும் உணவுப்பொருள் முட்டை. விலையும் குறைவு. தினமும் முட்டையை சாப்பிட்டாலும் அது சலிக்காமல் இருக்க ஆம்லெட், ஆஃப் பாயில் என பல வழிகளில் சாப்பிடலாம்.
அதிக கொழுப்பு எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள் மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் முட்டை சரியான உணவுத்தேர்வு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust