சம்மர் வந்துவிட்டது. உடல் சூட்டை தணிக்க, வயிற்றில் புண் ஏற்படாமல் இருக்க அதிகம் காரமில்லாத உணவுகளை, குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
இளநீர், நீர்மோர், பழச்சாறுகள் அதிகமாக உட்கொள்ளும்படி நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதில் குறிப்பாக கூறப்படுவது தயிர் அல்லது நீர்மோர் தான். தினமும் சேர்த்துக்கொண்டால் மிகவும் நல்லது.
எனினும், ஒரு சில உணவுகளை நாம் தயிருடன் சேர்த்து சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை உண்டாக்கலாம். எந்தெந்த உணவுகளுடன் தயிர் சாப்பிடக்கூடாது என்பதை இங்கு பார்க்கலாம்...
தேநீர் சூடான பானம், தயிர் குளிர்ச்சியை தரும். சூடாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் உணவுகளை ஒரு சேர உட்கொண்டால், அது ஜீரண செயல்பாடுகளை பாதிக்கும்.
இதனால் வாந்தி, தலை சுற்றுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால், இரண்டையும் ஒன்றாக சேர்க்கக்கூடாது.
பராத்தா எனப்படும் ஸ்டஃப்டு சப்பாத்திகள் (உருளைக்கிழங்கு, காலிபிளவர்) இப்பொது தென்னாட்டு உணவுகளிலும் சேர்ந்துகொண்டது. இவற்றிற்கு பெரும்பாலும் அளிக்கப்படும் சைட் டிஷ் தயிர் தான்.
ஆனால் இந்த பராத்தாக்களுக்கு நெய், வெண்ணெய் அல்லது எண்ணெய் பயன்படுத்தி நாம் வேக வைக்கிறோம். இத்துடன் தயிரையும் சேர்த்து நாம் உட்கொண்டால் உணவு ஜீரணிப்பதில் தாமதம் ஏற்படலாம்
பிரியாணி, சப்பாதி, பராத்தா போன்ற உணவுகளுடன் நாம் சேர்த்து சாப்பிடுவது தயிருடன் வெங்காயம் சேர்க்கப்பட்டிருக்கும் ரைதாவை தான்.
ஆனால் தயிருடன் வெங்காயம் சேரக்கூடாது. வெங்காயம் சூட்டை கிளப்பிவிடும் உணவு என்பதால், மீண்டும் சூடான மற்று குளிர்ச்சியான இரு வெவ்வேறு பதார்த்தங்களி நாம் சாப்பிடுகிறோம்.
இதனால் இது இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது
வெயில் காலம் தொடங்கினால் அதிகம் சாப்பிடும் பழம் மாம்பழம் தான். மாம்பழத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளில் மாங்கோ லஸ்ஸியும் ஒன்று. ஆனால் இது இரண்டும் ஒன்றாக உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
எல்லோரையும் பாதிக்காது என்றாலும், சிலருக்கு வாந்தி, அஜீரணம் ஏற்படும். இதனால், கவனத்தோடு உட்கொள்ளவேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust