Gautam Adani  Twitter
ஹெல்த்

Adani: உலகப் பணக்காரர் பட்டியலில் 3வது இடம் - முதல் முறையாக ஏற்பட்ட சரிவு

Antony Ajay R

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருப்பவர் அதானி. கடந்த 2 ஆண்டுகளில் மலமலவென உயர்ந்தது அவரது ராஜாங்கம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் யாரென அறிந்திடாத அதானி குழுமத் தலைவர் அதிவேகமாக உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்துக்குச் சென்றார். ஆனால் இப்போது அங்கிருந்து சரிந்து மீண்டும் மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறார்.

இதன் மூலம் அமேசானின் ஜெஃப்பெசோஸ் தனது 2வது இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறார்.

ப்ளூம் பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் இன்றைய நிலவரப்படி அதானியின் சொத்துமதிப்பு 135 பில்லியன் டாலர்கள் அதாவது 10.98 லட்சம் கோடி ரூபாய். ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 138 பில்லியன் டாலர்.

அதானி கடந்த பிப்ரவரியில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக நீண்ட நாட்கள் நீடித்த முகேஷ் அம்பானியை வீழ்த்தியது அனைவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு படிப்படியாக முன்னேறிச் சென்று கொண்டேயிருந்தார் அதானி.

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தனது பெரும் பகுதி சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதிவைத்த போது அவரை விஞ்சி உலகப் பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு லூயிஸ் விட்டன் நிறுவன சிஇஓ பெர்னர்ட் அர்னால்டை விஞ்சி 3வது இடத்தையும் ஜெஃப் பெசோஸை விஞ்சி 2வது இடத்தையும் அடைந்தார். இப்போது தான் முதன்முறையாக பட்டியலில் மேலே ஏறியவர் ஒரு அடி கீழே எடுக்க வைத்திருக்கிறார்.

தற்போது முதன் முறையாக ஒரு படி கீழே இறங்கியிருக்கிறார் 60 வயது தொழலதிபரான அதானி. இவரது குழுமத்தில் அதானி என்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி போர்ட் மற்றும் சிறப்பு பொருளாதார பகுதிகள், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

Amazon நிறுவனரை விட அதிக சொத்து மதிப்பை எட்டிய அதானி! - எப்படிச் சாத்தியமானது தெரியுமா?


அதானி : சந்தை மதிப்பில் டாடாவை வீழ்த்தி சாதனை - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?