லட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் அவசர உலகில், சீக்கிரம் தூங்கச் சென்று சீக்கிரம் எழும் பழக்கம் இருக்கிறதா? சிலருக்கு இருக்கலாம், பெரும்பாலானவர்களுக்கு இல்லை. நிறையப் பொறுப்புகள் உள்ளன. குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, அலுவலக வேலை போன்ற நிறைய இருப்பதால் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் வாழ்வியலைப் பின்பற்ற முடிவதில்லை.
தூக்கத்துக்கு இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஒன்று, ஆழ்ந்த தூக்கம், இரண்டாவது - ஆழ்ந்த தூக்கம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்று.
நீங்கள் படுக்கும் அறை இருட்டாக இருப்பது நல்லது. தூக்கத்தைத் தூண்ட வசதியாக இருக்கும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்க உதவும்.
சூரியன் மறைந்த பிறகு தூங்கச் செல்ல சரியான நேரம்தான். ஆனால், அதை யாரும் பின்பற்றுவதில்லை. உடல் தூங்க தயாராகத்தான் இருக்கும் மற்ற உயிரினங்களைப் போல மனிதனைத் தவிர… சூரியன் மறைந்த பிறகு தூங்கும் நேரம் தொடக்கம் ஆகிறது. இயற்கை வாழ்வியலில், ஆரோக்கியமான வாழ்வியலில் இருப்போருக்கு, சூரியன் மறைந்த பின்னர் பசி எடுக்காது. தூக்கம் வரச் செய்யும். அந்தளவுக்கு உடல் இயற்கையோடு ஒன்றியிருக்கும் மற்ற உயிரினங்களைப் போல… காட்டில் விலங்குகளோ, பறவைகளோ சூரியன் மறைந்த பிறகு உணவு உண்பதில்லை… தூங்கச் செல்கின்றன. அல்லது தனது இருப்பிடத்தில் தங்கிவிடுகின்றன. மற்ற உயிரினங்கள் புரிந்து வைத்துள்ள இயற்கை தன்மையை மனிதன் மட்டும் மீறுவதால்தான் மனிதனுக்கு விதவிதமான நோய்கள் வருகின்றன.
காலையில் எழும் நேரம் என்பது மாறுபடும், அதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. முன்னாடி நாள் நீங்கள் தூங்கும் அளவு, தரத்தை பொறுத்துத்தான் தூங்கி எழும் நேரம் சொல்ல முடியும். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி கிடையாது. சில நாட்கள் நமது வாழ்வியலில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். அப்போது தூங்கச் செல்லும் நேரமும் தூங்கி எழும் நேரமும் மாறப்படும்.
மனித உடல் கடிகாரம் என்பது சர்கார்டியன் ரிதம். இரவு 9 - காலை 3 மணி வரை ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது மிக மிக முக்கியம். ஏனெனில், இந்த நேரங்களில் உடலின் கழிவு நீக்கச் சக்தி துரிதமாக வேலை செய்யும். இந்த வேலை சீராக நடந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். இந்த நோய் எதிர்ப்புச் சக்தி கிடைத்துவிட்டால் எந்த நோய்க்கும் யாரும் அஞ்சத் தேவையில்லை. நல்ல, ஆழ்ந்த தூக்கம் அதுவும் 9-3 மணியளவில் தூங்கினால் ஆரோக்கியமான உடலை எளிதில் பெற முடியும். எந்த மருந்து மாத்திரைகளும் செய்யாத மாயாஜாலத்தைத் தூக்கம் ஒன்றே நிகழ்த்தும். அந்தளவுக்குத் தூக்கம் நம் ஆரோக்கியத்தின் அடிப்படை அஸ்திவாரமாகிறது.
கல்லீரல், பித்தப்பை போன்றவை வேலை செய்யும் நேரம் இரவு 9-3…உடலின் கழிவு நீக்கச் சக்தி சீராகி, உடலுக்குத் தேவையான பராமரிப்பு சக்தியையும் தருகிறது.
உடல் கடிகாரத்தைப் பின்பற்றினால் நீங்கள் எந்தக் கடிகாரத்தையும் பின்பற்ற வேண்டாம். உடலே பசியை உணர்த்தும், நோயைக் குணமாக்கும், தூக்கத்தை வரவைக்கும். ஆரோக்கியமான வாழ்வியலைப் பின்பற்றினால் போதும், உடலே உங்களைத் தூங்க வைக்கும் எழவும் வைக்கும். நோய்களை உடலே குணமாக்கும் எந்த மருந்துகளும் தேவையில்லை.
அடிக்கடி உடல் சரியில்லாமல் போவது
மன அழுத்தம்
ரத்த அழுத்தத்தில் சீரான அளவில் இல்லாமல் போவது
சர்க்கரை நோய்
உடல் எடை கூடுவது
மனச் சோர்வு
மற்றவரிடம் எரிந்து எரிந்து விழும் மனநிலை
மலச்சிக்கல்
செரிமானக் குறைபாடுகள்
பயம் உணர்வு அதிகரித்தல்
மன உளைச்சலிலே தரமற்ற வாழ்க்கையை வாழும் நிலை
இரவு 7 மணிக்கு மேல் எந்த உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
தூங்கச் செல்லும் முன் வயிற்றில் உணவு இருக்கக்கூடாது.
தூங்கச் செல்லும் 2 மணி நேரத்துக்கு முன்னே மொபைல், லாப்டாப் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
படுக்கை அறையில் மென்மையான, மிதமான வாசனைத் திரவியம் இருக்கலாம். லாவண்டர் வாசம் தூக்கத்தைக் கொடுக்க உதவும்.
இயற்கையான இன்டோர் செடிகள் இருக்கலாம்.
படுக்கை அறை சுத்தமாக இருப்பது முக்கியம்.
ரேடியம் ஸ்டிக்கர்ஸ் படுக்கை அறையில் இருக்கக் கூடாது.
படுக்கை அறை இருட்டான சூழலில் இருப்பது நல்லது.
தனியாகத் தூங்குவதைவிட உடன் துணையோ அல்லது பெற்றோர்களோ அல்லது உடன்பிறந்தவர்களோ அல்லது செல்ல பிராணிகளுடனோ தூங்குவது நல்லது. இதனால் தரமான தூக்கம் வர உதவும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust