Health: தலை முடியை டேமேஜ் செய்யும் பழக்கங்கள் என்ன? canva
ஹெல்த்

Health: தலை முடியை டேமேஜ் செய்யும் பழக்கங்கள் என்ன?

ஆண்களானாலும், பெண்களானாலும், தலை முடி என்பது பர்சனல் செண்டிமெண்ட். எல்லோருக்குமே கருத்த, அடர்த்தியான முடி வேண்டும் என ஆசை இருக்கும். பெண்களுக்கு எக்ஸ்ட்ராவாக தலை முடி நீளமாக வளரவேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.

Keerthanaa R

தலை முடி நம் உடலின் ஒரு அங்கம் என்றாலும், அது அழகு மற்றும் வயதுடனும் தொடர்புபடுத்தக்கூடிய விஷயமாகும். நம் தலை முடியை பாதுகாக்க, அழகாக வைத்துக்கொள்ள பாட்டி வைத்தியம் தொடங்கி இண்டெர்னெட் வரை அலசி, பார்த்து பார்த்து மெயிண்டெயின் செய்வோம்.

ஆண்களானாலும், பெண்களானாலும், தலை முடி என்பது பர்சனல் செண்டிமெண்ட். எல்லோருக்குமே கருத்த, அடர்த்தியான முடி வேண்டும் என ஆசை இருக்கும். பெண்களுக்கு எக்ஸ்ட்ராவாக தலை முடி நீளமாக வளரவேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.

இப்போது இருக்கும் காற்று மாசு, உணவு பழக்கத்தில் மாற்றங்கள் போன்றவற்றினால், நம் தலைமுடி நிறைய மோசமடைகிறது. திருமணம் ஆவதற்குள் முடிக் கொட்டிவிடக் கூடாது என்ற பயமும் வந்துவிடுகிறது. (குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு).

நாம் தினசரி செய்து வரும் எந்த பழக்கத்தினால் நம் முடி சேதமடைகிறது என இங்கு பார்க்கலாம்

ஹேர் ஸ்ட்ரெயிட்னர் பயன்படுத்துவது

நம் முடியை ஸ்டைல் செய்துகொள்ள நாம் ஹேர் ஸ்ட்ரெயிட்னர் பயன்படுத்துகிறோம். குறிப்பாக பெண்கள். இது அதிக சூட்டை பயன்படுத்தி தான் நம் முடியை நேராக்குகிறது.

தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி உடையும், சீக்கிரத்தில் உலர்ந்தும் போகும்.

இயற்கையாக என்ன வடிவத்தில் முடி இருக்கிறதோ அப்படியே விடலாமே?

இறுக்கமான பன்

நம் முடியை அள்ளி முடிந்து கொண்டைப் போட்டுக்கொள்வோம். சம்மரில் இது பெண்களிடம் அதிகம் பார்க்கக்கூடிய ஹேர் ஸ்டையில் ஆகும். கொண்டை போடுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் இறுக்கமாக போடுவதால் முடி உடைய வாய்ப்பிருக்கிறது

காலை உணவை தவிர்ப்பது

நாம் இரவு முழுதுமே சாப்பிடாமல் இருப்போம். இதனால் தான் காலை உணவை பிரேக் ஃபாஸ்ட் என்று அழைக்கிறோம். காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் தீங்குகளில் முடி சேதமாவதும் ஒன்று

ஹேர் பிரஷ்

ஒவ்வொருவரின் முடியின் தன்மையும் வேறுபடும். இதனால் அதன் தன்மைக்கு ஏற்ற ஹேர் பிரஷை நாம் தேர்ந்தெடுப்பது அவசியம்

கண்டிஷனர்

முடியை ஷாம்பூ வாஷ் செய்யும்போது கண்டிஷனர் பயன்படுத்தவேண்டும் என பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால் இதனை முடியின் வேரில் பயன்படுத்தக்கூடாது.

கெமிக்கல்கள் நிறைந்த கண்டிஷனருக்கு பதிலாக வெந்தயம், தயிர் போன்ற இயற்கை கண்டிஷனர்கள் பயன்படுத்தலாம்.

ஹேர் வாஷ்

இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் ஹேர் வாஷ் செய்யலாம். அதுவும் பொடுகு தொல்லை இருந்தால் மட்டுமே. இல்லையென்றால், மூன்று முதல் 5 நாட்கள் இடைவெளியை பின்பற்றுங்கள்.

தலைக்கு குளிப்பதாக இருந்தால், குளிர்ந்த நீரை பயன்படுத்துவது சிறந்தது. சுடுத் தண்ணீர் முடியை சேதமாக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?