Health: மதிய உணவுக்கு பின் ஸ்வீட் சாப்பிடுபவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு canva
ஹெல்த்

Health: மதிய உணவுக்கு பின் ஸ்வீட் சாப்பிடுபவரா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு

சாப்பிடும்போது நன்றாக இருந்தாலும், நாளடைவில் இவை உடல்நலத்தை பாதிக்கலாம். அப்படி மதிய உணவு சாப்பிட்டவுடன், ஸ்வீட் சாப்பிட வேண்டும் எனத் தோன்றினால், இவற்றை சாப்பிடலாம்

Keerthanaa R

ஸ்வீட்ஸை வெறுப்பார் இல்லை. ஒருவர் சுகர் பேஷண்ட்டாக இருந்தாலும், ஜிலேபி தட்டை பார்த்தால் சிறு குழந்தையாகவே மாறி விடுவார்.

எந்த நேரத்திலும் அதீத மனமகிழ்ச்சியுடன் நாம் சாப்பிடும் பதார்த்தம் இனிப்புகள். சிலருக்கு மதிய உணவு சாப்பிட்டவுடன் ஏதாவது இனிப்பாக சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் எப்போதுமே இருக்கும். சாக்லேட்களையோ, ஐஸ் கிரீமோ, அல்லது இனிப்பு வகைகள் கிடைக்கும் பட்சத்தில் அல்வா, கேசரி என எதையாவது உள்ளுக்கு தள்ளுவோம்.

சாப்பிடும்போது நன்றாக இருந்தாலும், நாளடைவில் இவை உடல்நலத்தை பாதிக்கலாம். அப்படி மதிய உணவு சாப்பிட்டவுடன் ஸ்வீட் சாப்பிட வேண்டும் எனத் தோன்றினால், இவற்றை சாப்பிடலாம்.

ஆப்பிள்:

நமக்கு தோன்றும் சர்க்கரை ஏக்கத்தை எதிர்கொள்ள சிறந்த பழம் ஆப்பிள். இதில் நாற்சத்தும் அதிகம் உள்ளதால், உடலுக்கும் நல்லது

ஃபாக்ஸ் நட் அல்லது தாமரை விதைகள்:

வைட்டமின் மற்றும் நாற்சத்து நிறைந்த தாமரை விதைகள் இனிப்பு சாப்பிடவேண்டும் என்ற தூண்டுதலை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், அதிக கலோரிகள் உட்கொள்வதையும் சீராக்குகிறது. வேகவைத்து காரம் சேர்த்து சூடான டீயுடன் இதை சாப்பிட்டல் சுவையும் கூடும்.

பேரிச்சம்பழம்:

இயற்கையாகவே சர்க்கரை தன்மையுடைய உணவுவகைகளில் பேரிச்சம்பழம் ஒன்று. தினசரி இரண்டு டேட்ஸ் சாப்பிடுவதால், இரும்புசத்து கூடும், ரத்தம் ஊறும், மற்றும் சர்க்கரை தூண்டுதலை குறைக்க உதவும்

டார்க் சாக்லேட்:

சாக்லேட்கள் தான் சாப்பிடக்கூடாது. ஆனால், டார்க் சாக்லேட் சாப்பிடலாம்!. இவற்றில் இனிப்பு தன்மையை விட அதிகமாக கசப்பு தன்மை தான் இருக்கும். இவற்றுடன் பாதம், கடலை, பிஸ்தா போன்ற நட்ஸ்களை சாப்பிட்டால் இன்னும் ஹெல்தி

பாதாம்:

சாப்பிட்டவுடன், பாதாம் சாப்பிடுவது சுகர் கிரேவிங்கை கட்டுப்படுத்த உதவும். இதில் மெக்னீசியம், வைட்டமின் ஈ, நாற்சத்துக்கள் நிறைந்துள்ளதால், ரத்தம் அதிகமாக சுரக்கும்.

பெர்ரி:

இதுவும் ஒரு விதத்தில் பழ வகைகள் தானே? இயற்கையான இனிப்பு தன்மைக்கொண்ட இவை உடலுக்கு நல்லது. ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி என இதில் நிறைய வகைகள் உண்டு. எடை குறைக்க உதவும் உணவுகளில் இது ஒன்று.

டிரை ஃப்ரூட் மிக்ஸ்

அனைத்து வித உலர் பழங்களையும், சேர்த்து, ஒரு பவுல் அளவிற்கு இவற்றை சாப்பிடலாம். சர்க்கரை தூண்டுதலும் அடங்கும், உடலுக்கும் நல்லது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?