Health: 30 வயதை கடந்துவிட்டீர்களா? இந்த சோதனைகள் மேற்கொள்வது அவசியம்
Health: 30 வயதை கடந்துவிட்டீர்களா? இந்த சோதனைகள் மேற்கொள்வது அவசியம் canva
ஹெல்த்

Health: 30 வயதை கடந்துவிட்டீர்களா? இந்த சோதனைகள் மேற்கொள்வது அவசியம்

Keerthanaa R

மாறிவரும் வாழ்வியல் முறைகளால், எந்த நேரத்திலும் நமது உடல் நலம் பாதிப்படைவதையும், இளம் வயது மரணங்களையும் நாம் தினம் தினம் சந்தித்து வருகிறோம்.

நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, செய்யும் உடற்பயிற்சிகள், சரியான உறக்கம் என அனைத்துமே ஒரு விதமான நிலையற்ற சுழலில் சிக்கியுள்ளது எனலாம். போதாக் குறைக்கு மின்னணு சாதனங்களின் ஆதிக்கமும் நமது அன்றாடத்தில் அதிகரித்துவிட்டது.

இந்த சூழல் நம்மை நமது வாழ்வியல் முறையை ஆரோக்கியமானதாக ஆக்கிக்கொள்ள ஒரு கட்டாயத்தில் தள்ளுகிறது.

25 அல்லது 30 வயதுக்குரியவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் வரும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

வரும் முன் காப்போம் என்ற நோக்கத்தில், நமது உடல் பாதிப்படையும் முன், தக்க சோதனைகளை மேற்கொண்டு, அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது

என்னென்ன சோதனைகளை மேற்கொள்ளலாம்?

BP (ரத்த அழுத்த பரிசோதனை) :

சராசரியாக மனிதருக்கு இருக்கவேண்டிய ரத்த அழுத்த எண்ணிக்கை 120/80 என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த அளவை தான் முதலில் நாம் தெரிந்துவைத்திருக்கவேண்டும். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், இருதயம் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

நமது வேலை பளு போன்றவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். இதனால், அவ்வப்போது சோதனை செய்துகொள்ள டிஜிட்டல் ரத்த அழுத்த சாதனம் ஒன்றை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்

சுகர் டெஸ்ட் அல்லது ரத்த சர்க்கரை சோதனை:

இது நீரிழிவு நோய் இருப்பதை நமக்கு தெரியப்படுத்தும் சோதனையாகும். இந்த சோதனை செய்துகொள்ள 12 நேரம் முன்பு வரை எதுவும் சாப்பிடக்கூடாது. இதனை ஃபாஸ்டிங் சுகர் என்பர். இதன் அளவு 99க்கு குறைவாக இருக்கவேண்டும்.

ரத்த சர்க்கரையின் அளவு 126க்கு மேல் இருந்தால், அது டயாபிடீஸ் இருப்பதை குறிக்கும். சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், HBA1c அளவை கணக்கிடுவார்கள். அதற்கேற்றவாறு நமது உணவு பழக்கத்தில் நாம் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

Lipid Profile:

மருத்துவ பரிசோதனைகளில் இது ஒரு முக்கியமான சோதனையாகும். நமது உடலில் இருக்கும் கொலஸ்டிரால் மற்றும் ட்ரைகிளிசரைடு போன்ற கொழுப்புகளில் இருக்கும் அசாதாரணமான விஷயங்களை கண்டறிய இந்த சோதனை உதவுகிறது.

இதன் மூலம் மரபணு சார்ந்த நோய்கள், இருதயம் தொடர்பான பிரச்னைகள், கணைய அழற்சி போன்றவற்றை கணிக்க இயலும்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சோதனையை நாம் மேற்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரையாக உள்ளது. நீரிழிவு, ரத்த கொதிப்பு பிரச்னைகள் உள்ளவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறை சோதனையை மேற்கொள்ளவேண்டும்.

இசிஜி:

இருதயம் தொடர்பான பிரச்னைகளை கண்டறியும் சோதனை இது. இது இதயத்துடிப்பில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை கண்டறிய உதவுகிறது.

ஒரு வேளை இதில் நமக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால், எக்கோ எனப்படும் மற்றுமொரு சோதனையை மேற்கொள்ளவேண்டும். இதில் நமது இருதய செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு அதில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், அதற்கான சிகிச்சையை நாம் பெற வேண்டும்

பிஎம்ஐ:

பாடி மாஸ் இண்டெக்ஸ் எனப்படும் இந்த சோதனை நமது உடல் பருமனை கணக்கிட உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு, அவர்களது உயரத்துக்கு ஏற்றவாறு குறிபிட்ட எடை இருக்கவேண்டும் என கணக்கு பட்டியல் தான் இந்த பாடி மாஸ் இண்டெக்ஸ். இதனை கணக்கிட நீங்கள் நிச்சயம் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை.

வீட்டிலிருந்தே இந்த சோதனையை நாம் தெரிந்துகொள்ளலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?