கெட்ட கொழுப்பு அதிகரித்து விட்டதா? - கண்டுபிடிப்பது எப்படி? KATLEHO SEISA
ஹெல்த்

கெட்ட கொழுப்பு அதிகரித்து விட்டதா? - கண்டுபிடிப்பது எப்படி?

அதிகக் கெட்ட கொழுப்பு சேர்ந்துவிட்டால், உடலுக்குள் ரத்த ஓட்டம் சீராகச் செல்வது பாதிக்கப்படும். குறிப்பாக, கால், தொடை தசைகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது பாதிக்கப்படலாம்.

மினு ப்ரீத்தி

உடலில் மிக அதிகமான அளவில் கொழுப்பு சேர்ந்திருப்பதை அறிய முடியும். முக்கியமான சில அறிகுறிகளை நீங்கள் உணரக்கூடும். அதை வைத்து உடலில் கெட்ட கொழுப்புச் சேர்ந்திருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். சிலருக்கு, அதிகக் கொழுப்புச் சேர்ந்திருப்பது அறிய முடியாமல் போகலாம். ஆனால், பலரால் உணர முடியும். உடலில் அதிகக் கெட்ட கொழுப்பு சேர்ந்தால் பல உடல்நல கோளாறுகள் வரக்கூடும்.

அதிகக் கெட்ட கொழுப்பு சேர்ந்துவிட்டால், உடலுக்குள் ரத்த ஓட்டம் சீராகச் செல்வது பாதிக்கப்படும். குறிப்பாக, கால், தொடை தசைகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது பாதிக்கப்படலாம். பொதுவாக ரத்தப் பரிசோதனை மூலம் கெட்ட கொழுப்பு எந்தளவுக்கு உள்ளது என அறிய முடியும். ஆனால், உடலில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளதா என அறிந்துகொள்ளப் பரிசோதனை தேவையில்லை. உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா என செக் செய்துகொள்ளுங்கள்.

தோலில் மாற்றம்

உங்கள் சருமம் வெகுவாக மாறும் மற்றவர்கள் பார்த்த உடனே வித்தியாசம் தெரியும் அளவுக்கு மாறலாம். சருமத்தின் நிறம் மாறக்கூடும். பெரும்பாலான நோயாளிகளுக்கு உலர் சருமமாக (டிரை ஸ்கின்) மாறிப் போகும். சருமத்துக்குள்ளே டீப் லேயர்கள் இருக்கும். அதில் கொழுப்பு படர்ந்து, படிந்து இருக்கலாம். இதனால் உடலுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் மாற்றம் உண்டாகலாம். சருமத்தில் ஏராளமான செல்கள் உள்ளன. இந்த செல்களுக்கு போதுமான நுண்ணூட்டச் சத்துகள் சேருவதில் தடை ஏற்படலாம். இதனால் சருமத்தின் நிறமும் மாறும்.

வியர்வை

பொதுவாக வியர்வை சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆம், அதுவும் ஒரு கழிவுதான். ஆனால், அதிகக் கெட்ட கொழுப்பு இருந்தால் நீங்கள் கவனிக்கும் அளவுக்கு வியர்வையும் வெளிவரலாம். காய்ச்சல், சளி என உடல் தொந்தரவுகள் கொடுத்தால் நல்லது. எந்தத் தொந்தரவுகளும் தராமல் வெறுமனே உடல் எடை அதிகரித்து இருந்தால் நீங்கள் சிகிச்சை எடுப்பது நல்லது.

மஞ்சள் நகங்கள்

ஆர்டரியில் அதிக அளவு பிளேக் இருந்து, அது அப்படியே படர்ந்து பிளாக் ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஆர்டரியில் தடை ஏற்பட்டு இருந்தால், பிளாக் ஆகி இருந்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தம் சீராகச் செல்லாது. நகத்துக்கு ரத்தம் சீராகச் செல்லாது. இதனால், நகம் மஞ்சள் நிறமாக மாறிப் போகலாம். அடர் நிறத்தில் கோடுகள் நகங்களில் விழுந்திருக்கலாம். உங்கள் நகங்களின் வளர்ச்சி செல்லும் பகுதியை நோக்கி அடர் நிறத்தில் கோடுகள் விழலாம். இப்படி இருந்தாலும் உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து இருப்பதை எளிமையாக அறிய முடியும்.

பெரிபெரல் ஆர்டரி நோய்

கால், தொடைகளுக்கு, இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிக்கு ரத்த ஓட்டத்தில் தடையோ சிக்கலோ ஏற்பட்டால் கெட்ட கொழுப்பு உடலில் பில்டப்பாகும் வாய்ப்பு இன்னமும் அதிகம். உணர்வற்று மறுத்துப் போகும் தன்மை உண்டாகலாம். கால், பாதங்களில் கூசுதல் உணர்வு வரலாம். ஏதோ புதிய மாதிரி கிச்சுகிச்சு மூட்டுவது போல உணர்வு தெரியலாம். கால், பாதத்தில் உணர்வு எதுவும் தெரியாமல் போகலாம். அல்சர் புண்கள்கூட உருவாக வாய்ப்பு உள்ளது. தோள்பட்டைக்கும் கால்களுக்குச் சீராகச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் உடலில் வலி, அசௌகரியமின்மை, எரிச்சல், கூச்ச உணர்வு, மறுத்துப்போதல் போன்றவை நிகழலாம்.

அதிக அளவில், கவனிக்காமலே விட்டு, கெட்ட கொழுப்பானது இறுதியில் இதய நோய்களை ஏற்படுத்தும். அதிக அளவு கொழுப்புத்தன்மை ரத்தத்தோடு கலந்து, கொலஸ்ட்ரால் அளவை அதிக அளவில் காண்பிக்கும். இதய நோய்கள் வர மிக ஆபத்தான அறிகுறிகளை உண்டாக்கும்.

கெட்ட கொழுப்பு உடலில் சேராமல் இருக்கச் சரியான வாழ்வியல் பழக்கமும் உணவுப் பழக்கமும் கடைப்பிடிப்பது மட்டுமே நிரந்தரமான தீர்வைத் தரும். வெறும் மாத்திரை மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு நீங்கள் முறையற்ற உணவு மற்றும் வாழ்வியல் பழக்கத்தில் இருந்தால் தீர்வு கிடைக்காது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?