குளிர் காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Glutathione- உணவுகள் மூலம் பெறுவது எப்படி? Twitter
ஹெல்த்

குளிர் காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Glutathione- உணவுகள் மூலம் பெறுவது எப்படி?

க்ளுடாதியோன் என்பது நம் உடலில் உள்ள ”மாஸ்டர் ஆன்டிஆக்ஸிடன்ட்“, இது நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும், நம் இம்யூன் செல்கள் சீராக செயல்பட உதவும். செல்களில் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க உதவும் கேன்சரை தடுப்பதில் இதற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு .

NewsSense Editorial Team

இன்றைய கால கட்டத்தில் மனஅழுத்தம், காற்று மாசு, தரமற்ற உணவு வகைகள் என்று நம் எதிர்ப்பு சக்தியை பலவீன படுத்தும் பல பிரச்சனைகள் உள்ளன. குளிர் காலத்தில் அதிக கவனத்தோடு நம் உடலை பார்த்து கொள்ளவேண்டும் , சளி இருமல் வைரல்  காய்ச்சல் ஆகியவை அதிகமாக பரவக்கூடிய காலகட்டம் இது. 

நம் எதிர்ப்பு சக்தியை உயர்த்தினால் தான் இந்த நோய்களை தவிர்க்க முடியும். நம் எதிர்ப்பு சக்தியை திடமாக வைப்பதற்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது க்ளுடாதியோன்.

க்ளுடாதியோன் என்பது நம் உடலில் உள்ள ”மாஸ்டர் ஆன்டிஆக்ஸிடன்ட்“, இது நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும், நம் இம்யூன் செல்கள் சீராக செயல்பட உதவும். செல்களில் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க உதவும் , உடலின் உள் ஏற்படும் வீக்கத்தை சரி செய்ய உதவும் , கல்லீரல் சீராக செயல்பட உதவும் , கேன்சரை தடுப்பதில் இதற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு . இதைப்போன்று இதன் அதிசயமான பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம் .

இந்த அருமையான ஆன்டிஆக்ஸிடண்ட்டை அதிகரிக்க பல வழிகள் உள்ளன .சமீப காலமாக க்ளுடாதியோன் மாத்திரைகள் பிரபலமாக உள்ளன .ஆனால், இதை மாத்திரை வடிவில் எடுத்துக்கொண்டால் செரிமான மண்டலத்தில் இது முற்றிலும் அழிந்து பெரிதாக பலன் கொடுக்காது என்று சில ஆய்வுகள் சொல்கிறது. எனவே இதை உணவுகள் மூலம் இயற்கையாக உயர்த்துவதே சிறந்த வழி. 

க்ளுடாதியோனை உயர்த்த உதவும் உணவுகள்:

 சல்பர் அதிகமாக உள்ள காய்கறிகளான காளிபிளவர் , ப்ரோக்கோலி , முட்டைகோஸ் , முள்ளங்கி , வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும்போது க்ளுடாதியோன் அதிகரிக்கும் , 

வைட்டமின் சி அதிகமாக உள்ள நெல்லிக்காய் , எலுமிச்சை , ஆரஞ்சு , குடைமிளகாய் , கிவி ஆகிய உணவுகளை அடிக்கடி சேர்க்கும்போது க்ளுடாதியோன் அளவு உயரும்.

 நல்ல தரமான மஞ்சள் சாரம் எடுத்துக்கொண்டால் அது க்ளுடாதியோனை உயர்த்த உதவும் , மஞ்சளை மிளகுடன் எடுத்துக்கொண்டால் உடலில் இன்னும் நன்றாக சேரும் 

 மோரிங்கா என்று மேற்கத்திய நாடுகளில் கொண்டாட படும் நம் முருங்கை கீரையில் 18 அமினோ ஆசிட்டுகள் நிரம்பி உள்ளன , இவை க்ளுடாதியோனை உயர்த்த பெரிதும் உதவி செய்யும்.

இது மட்டும் இல்லாமல் , இயற்கையாகவே க்ளுடாதியோன் நிரம்பி வழியும் உணவுகளான கீரை வகைகள் , அவகாடோ , வெள்ளிரிக்காய் , பீன்ஸ் ஆகிய உணவுகளை  எடுத்துக்கொள்ளவதும் மிக நல்லது , இவை அனைத்துடன் நல்ல உறக்கமும் நல்ல உடற்பயிற்சியும் இருந்தால் எந்த விதமான நோயையும் கண்டு நம் அஞ்ச வேண்டிய அவசியமே இருக்காது.

- Swetha

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?