sex

 

Twitter

ஹெல்த்

தாம்பத்திய உறவு போரடிக்கிறதா? செக்ஸாலஜிஸ்ட் தரும் இந்த ஆலோசனையை முயற்சித்து பாருங்கள்

NewsSense Editorial Team

ஒரே விஷயத்தைத் தினமும் ஒரே மாதிரி செய்தால் நிச்சயம் அலுப்பு தட்டும். இதில் உடலுறவு விதிவிலக்கல்ல.ஆண்கள், பெண்கள் இருபாலினருமே உடலுறவில் கணிசமான அளவுக்கு இந்த அலுப்பை (Boredom) அனுபவிக்கிறார்கள்.


செக்ஸாலஜிஸ்ட் சொல்லும் காரணம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல செக்ஸாலஜிஸ்ட் ஆல்ஃபிரெட் கின்ஸே (Alfred Kinsey) இதை `உளவியல் சோர்வு’ (Psychological Fatigue) என்று குறிப்பிடுகிறார். மிக நீண்ட காலத்துக்கு, திரும்பத் திரும்ப நிகழும் எந்த அனுபவமும் அலுப்பைத்தான் ஏற்படுத்தும். 1966-ம் ஆண்டில் ஓர் ஆய்வு (Ruben’s Study) நடத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட, ஆண்மைக்குறைவு உடைய 100 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், தங்கள் மனைவிகளிடம் செக்ஸில் ஈடுபடும்போதுதான் அவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுகிறது, மற்ற பெண்களிடம் அல்ல என்பது தெரியவந்தது.

தம்பதிகள், காலம் காலமாக ஒரே பாணியில், திரும்பத் திரும்ப, இயந்திரத்தனமாக, உப்புச்சப்பில்லாமல் உறவுகொள்வதுதான் இந்த மனச்சோர்வுக்குக் காரணம். இந்தியாவில், நெரிசல் மிக்க நகர வாழ்வில் தம்பதியருக்குப் போதுமான தனிமை கிடைப்பதில்லை. பல தம்பதியர் செக்ஸில் பரீட்சார்த்த முயற்சிகளைத் தவிர்த்துவிடுகிறார்கள். சமூகத்தில் காலம் காலமாகக் கற்பிக்கப்பட்டுவரும் வழக்கமான, அதே பாணியைத்தான் செக்ஸில் கடைப்பிடிக்கிறார்கள்.

Board Sex

சுவாரஸ்யமில்லா உடலுறவு

இன்றைக்குப் பலரும் தங்கள் துறையில் சாதனை படைப்பது, பணம் சம்பாதிப்பது, அதைப் பெருக்குவது, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவது ஆகியவை மட்டுமே வெற்றி என நினைக்கிறார்கள். இந்த ஓட்டப்பந்தயத்தில் செக்ஸ் என்பது எல்லாவற்றுக்கும் பின்னால், கடைசியில் மிக மெதுவாக நடந்துவருகிறது அல்லது காணாமலேயே போய்விடுகிறது.

40 வயதைக் கடந்த பலர் சுவாரஸ்யமில்லாமல்தான் செக்ஸில் ஈடுபடுகிறார்கள். அதில் புதிதாக எதையும் செய்து பார்ப்பதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் செக்ஸ் போரடித்துவிடுகிறது. நடுத்தர வயதுடைய ஓர் ஆண் இது குறித்துக் கவலைப்பட்டால், சர்வ சாதாரணமாக, `இந்த வயசுக்கு மேல அதைப் பத்தி ஏன் கவலைப்படுறே?’ என்று பதில் சொல்லிவிடுவார்கள். இது பெண்களுக்கும் பொருந்தும். இவர்களுக்குப் பல நேரங்களில் செக்ஸ் கடமைக்குச் செய்ய வேண்டிய ஒரு காரியமாகிவிடுகிறது.

Romance

தோல்… காமம்

சரி, இந்த `செக்ஸுவல் போர்டம்’-ல் இருந்து வெளிவருவது எப்படி? சின்னசின்ன செயல்பாடுகள்கூடக் காமத்தின் அத்தனை சாத்தியங்களையும் திறந்துவிட்டுவிடும். நம் பாலுறுப்புகள்தான் செக்ஸ் உறுப்புகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம் உடலில் இன்னும் அதிகம் கவனிக்கப்படாத பகுதி ஒன்று உண்டு... அது நம் தோல். தோலின் ஒவ்வொரு இன்ச்சிலும் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ஆயிரக்கணக்கான நரம்புகள் இருக்கின்றன. அவற்றில் சில நூறு நரம்புகளைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.

காமசூத்ரா எழுதிய வாத்ஸ்யாயனர், அந்த நூலில் செக்ஸுக்கு முன்னர் செய்யவேண்டிய, காமத்தைத் தூண்டக்கூடிய சின்னசின்ன செயல்கள் (Foreplay) பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதில் 27 வகை முத்தங்கள், இன்ப மூட்டும் செல்லக் கடிகள், உணர்ச்சி வேகத்தில் செய்யும் நகக்கீறல்கள் எனப் பலவற்றை உடலுறவுக்கு முன்பு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார். எடுத்தவுடனேயே கட்டிலுக்குப் போய்விடாமல் தம்பதியர் செய்யவேண்டிய சில வேலைகள் இருக்கின்றன. பேசலாம். விளையாடலாம். தாயம், கேரம்போர்டு ஆடுவதெல்லாம்கூட செக்ஸுக்கான மனநிலையைத் தூண்டும். அதற்குப் பிறகு ஃபோர்ப்ளேயில் இறங்கி மெல்ல உடலுறவுக்குத் தயாராகலாம். நல்ல செக்ஸுக்கு ஃபோர்ப்ளே மிக அவசியம்.

மனம் திறந்து பேசுங்கள்

செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்னர், வாழ்க்கைத் துணையிடம் மனம் திறந்து பேசுங்கள்; செக்ஸில் புதிய பரிசோதனை முயற்சிகளை வரவேற்கத் தயாராகுங்கள். கொடுப்பதும் பெறுவதும் தம்பதியர் இருவருக்கும் பொதுவானதாக இருக்கட்டும்.

உங்கள் வாழ்க்கைத்துணையிடம் அவர் எதை விரும்புகிறார் என்று கேளுங்கள். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை அவரிடம் சொல்லுங்கள். உடலுறவில் விதவிதமான நிலைகளைக் கடைப்பிடியுங்கள். அதே அறை, அதே கட்டில், அதே திரைச்சீலைகூடச் சிலருக்கு செக்ஸில் ஆர்வமின்மையை ஏற்படுத்திவிடும். உடலுறவுக்காக நீங்கள் வைத்திருக்கும் வழக்கமான நேரத்தை, இடத்தை மாற்றிப் பாருங்கள். பரபரப்பின்றி இருக்கும் ஒரு நேரத்தில் இதை முயன்று பாருங்கள். வசதியிருப்பவர்கள் வெளியே எங்கேயாவது விடுதிகளில்கூட இதை வைத்துக்கொள்ளலாம்.

Kiss

முத்தத்திலிருந்து தொடங்குங்கள்

வெவ்வேறு இடங்களில், விதங்களில் செக்ஸை முயற்சிசெய்வது வாழ்க்கைத்துணையிடம் காமத்தைத் தூண்ட உதவும். அழகான படுக்கை விரிப்புகள், மெல்லிய உள்ளாடைகள், மிதமான விளக்கொளி, இனிமையான இசை, நெருக்கமாக ஆடும் நடனம், அற்புதமான உணவை இருவரும் சேர்ந்து சாப்பிடுவது... இவையெல்லாம்கூட ஆரோக்கியமான செக்ஸுக்குத் துணை நிற்கும்.

மென்மையான முத்தத்துடன் ஆரம்பிக்கலாம். இவையெல்லாம், உங்கள் வாழ்க்கைத்துணையின் உள்ளே இருக்கும் ஒரு புதிய மனிதரைக் கண்டுபிடிக்கும் முயற்சி என வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்தை நிச்சயம் அவர் அங்கீகரிப்பார். அவருக்குக் கிடைக்கும் இன்பத்துக்கான நன்றியை ஏதாவது ஒருவகையில் உங்களுக்கு வெகுமதியாகத் தருவார். 'செக்ஸை செழுமையாக, ஆடம்பரமான வழியில் கையாளுங்கள். வாழ்க்கையையும், காதலையும், ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?