"இந்த சத்தம் டென்ஷன், Stress-ஐ குறைக்கும்" - ஆய்வு செல்லும் ஆஹா தகவல்! Twitter
ஹெல்த்

"இந்த சத்தம் டென்ஷன், Stress-ஐ குறைக்கும்" - ஆய்வு செல்லும் ஆஹா தகவல்!

Antony Ajay R

இன்றைய காலக்கட்டத்தில் டென்ஷன், பதற்றம், மன அழுத்தம் போன்ற மன நல பாதிப்புகள் பரவலாக இருக்கின்றன. இவை உடல் நலத்திலும் நம்முடைய நடத்தையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சமுதாயம் உருவாக மக்கள் மனங்களில் நிம்மதியும் சமாதானமும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இந்த பரவாலன பிரச்னைகள் தனி மனிதர்களை மட்டுமல்லாமல் சமூகமாகவும் நம்மைப் பாதிக்கிறது.

இந்த பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கும் ஒரு சுலபமான ஆயுதம் பறவைகளின் ஒலி என ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பிரச்னைகளுக்கான காரணம் என்ன என்பதையும் ஆராய்ந்திருக்கின்றனர்.

இன்றைய நகரமயமாதல் தான் நமக்கு பதற்றம், மன அழுத்தத்துக்கு முக்கியமான ஆய்வு என்று கூறுகிறது அந்த ஆய்வு. ஆய்வாளர்கள் குழு 295 உறுப்பினர்களில் மேற்கொண்ட சோதனையில் நகரங்களில் இருக்கும் இரைச்சல், போக்குவரத்து நெரிசலில் எழும் சத்தம் போன்றவை நம் மனதை வெகுவாக பாதிக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு போக்குவரத்து இரைச்சல் கொஞ்ச சத்தத்திலும் அதிக சத்தத்திலும் போடப்பட்டது. அடுத்த பறவைகளின் ஒலி இரண்டு அளவுகளிலும் போடப்பட்டது. இந்த சத்தங்களுக்கு அவர்களின் உடல் மற்றும் மன ரெஸ்பான்ஸைப் பொறுத்து ஆய்வின் முடிவுகள் அமைந்துள்ளன.

ஆய்வின் முடிவுகள் பறவைகளின் ஒலியானது நமக்கு அமைதியும் நிம்மதியும் தருவதுடன் மன நலத்தையும் பாதுகாப்பதாக கூறுகின்றன.

குறிப்பாக காலை எழுந்தவுடன் பறவைகளின் சத்தைத்தை கேட்பது நமக்குள் உற்சாகத்தை ஏற்படுத்தும். பதற்றத்திலிருந்து வெளிவரவும் பறவைகளின் ஒலி நமக்கு உதவுகிறது.

2050ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 70% பேர் நகரத்தில் வசிப்பார்கள் என்கிறது நியூஸ்வீக் தளம். அதே வேளையில் பறவைகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. சரி, இப்போது நாம் கொஞ்சம் பறவைகளுக்கு செவி கொடுக்கலாம்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?