மதுரை முதல் உஜ்ஜைன் வரை: இந்தியாவின் பழமையான 5 நகரங்கள் பற்றித் தெரியுமா? Twitter
ஹெல்த்

மதுரை முதல் உஜ்ஜைன் வரை: இந்தியாவின் பழமையான 5 நகரங்கள் பற்றித் தெரியுமா?

Antony Ajay R

மனிதர்கள் பிற விலங்குகளைப் போலில்லாமல் ஒன்று கூடி வாழத்தொடங்கியது தான் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கிய கட்டம். கூட்டம் கூட்டமாக அலைந்து திரிந்தவர்கள் ஓரிடத்தில் தங்கி, ஊர்களை, கிராமங்களை உருவாக்கினர்.

தனித்தனி கூட்டமாக இருந்தவர்கள் வணிக நோக்கத்துக்காகவும், பிற காரணங்களுக்காகவும் ஒன்றாக வாழத் தொடங்குகையில் நகரங்கள் உருவாகின. இன்று மிகப் பெரிய மாநகரங்கள் எல்லாம் இந்தியாவில் உருவாகிவிட்டன.

பலதரப்பட்ட பண்பாடும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்தியாவின் வரலாறு சுவாரஸ்யமானது.

பல மன்னர் வம்சங்கள் பிறந்து, காணாமல் போயிருக்கின்றன. மதங்கள் உருவாகியிருக்கின்றன. இந்த சிறப்பு மிக்க நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நாகரீகம் செழித்திருந்தது.

இந்தியாவின் மிகப் பழமையான 5 நகரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உஜ்ஜைன்

கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் உஜ்ஜைன் இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று. இது இந்துக்கடவுளான சிவன் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நகரம் உருவாகியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

பண்டைய புராணங்களான மகாபாரதம் போன்றவற்றிலும் இடம் பெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா இந்த நகரின் வரலாற்று சிறப்பை கூறுவதாக இருக்கிறது.

வாரணாசி

காசி, பனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக போற்றப்படுகிறது. இங்கு புனித யாத்திரை செல்வது இந்துக்களின் வழக்கமாக இருந்துவருகிறது.

இந்த நகரம் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் கல்வியின் மையமாகவும் வாரணாசி இருந்துள்ளது. கங்கை ஆற்றின் கரையில் இருப்பது வாரணாசிக்கு கூடுதல் சிறப்பு.

பாட்னா

பாட்டலிபுத்திரம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட நகரமே இன்றைய பாட்னா. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே மௌரிய மற்றும் குப்தா பேரரசுகளின் தலைநகராக இருந்திருக்கிறது.

புத்த மதம் இந்தியா முழுவதும் பரவ முக்கிய பங்குவகித்தது இந்த நகரம் தான். இங்குதான் மௌரியப் பேரரசர் அசோகர், புத்த மதத்தைத் தழுவி அதன் போதனைகளைப் பரப்பினார் என வரலாற்றில் படித்திருப்போம்.

மதுரை

கிழக்கின் ஏதேன்ஸ் என்று அழைக்கப்படுமளவு பழமையானது இந்த நகரம்.

மதுரை கிட்டத்தட்ட 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது என நம்பப்படுகிறது.

பாண்டிய மன்னர்களின் தலைநகராக திகழ்ந்தது. சில காலம் சோழப் பேரரசின் கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளது.

1311ம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மதுரைக்கு வருகை தந்து சில வளங்களை கொள்ளையடிக்கப்பட்டது, என்றாலும் இவர்கள் மதுரையை ஆளவில்லை.

1323ம் ஆண்டு துக்ளக் ஆட்சியின் கீழ் டெல்லி சாம்ராஜ்ஜியத்தின் மாகாணமாக மதுரை மாற்றப்பட்டது.

பின்னர் 1371ல் விஜயநகர ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது மதுரை.

விஜயநகர ஆட்சியில் கவர்னர்களாக இருந்த நாயக்கர்கள் 1530ம் ஆண்டுக்குப் பிறகு மதுரையை ஆளத் தொடங்கினர். இப்படி பல வரலாற்றுச் சிறப்பைக் கொண்டிருக்கும் நம் மதுரை திராவிட கட்டடக்கலையின் அடையாளமாகவும் இருக்கிறது.

மதுரையைச் சுற்றி சமண கல்வெட்டுகளையும், குகை ஓவியங்களையும் கூட நாம் பார்க்க முடியும்.

பூரி

இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று பூரி. பூரி ஜெகன்நாதர் கோவில் பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். இந்து ஆன்மிக கலாச்சாரத்தின் மையமாக திகழ்கிறது பூரி.

இந்த நகரம் குறைந்தது 2000 ஆண்டுகள் பழமையானது என்கின்றனர். இந்த பழமையான நகரங்கள் இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களத் தாங்கி நிற்கின்றன. வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயமாக இந்த இடங்களைப் பார்வையிட வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?